வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (09/05/2018)

கடைசி தொடர்பு:07:50 (10/05/2018)

பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்!

பாம்பன் குந்துகால் பகுதியில் உருக்குலைந்த நிலையில் உயிரற்ற டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. இதன் வால் பகுதி முழுமையாக சேதமடைந்ததால் நீந்த முடியாத நிலையில் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

பாம்பன் குந்துகால் பகுதியில் உருக்குலைந்த நிலையில் உயிரற்ற டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. இதன் வால் பகுதி முழுமையாக சேதமடைந்ததால் நீந்த முடியாத நிலையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது.

பாம்பன் குந்துகால் பகுதியில் கரை ஒதுங்கிய டால்பின்

கடல் வாழ் உயிரினங்களின் சொர்க்கமாக திகழ்வது மன்னார் வளைகுடா கடல் பகுதியாகும். இந்த கடல் பகுதியில் 3600-க்கும் மேற்பட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் உயிர் வாழ்ந்து வருகின்றன. இவற்றைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசு மன்னார் வளைகுடா கடல் பகுதியை உயிர் கோள காப்பகமாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மன்னார் வளைகுடா கடல் பூங்கா பகுதியில் வாழும் கடல் வாழ் உயிரினங்களுக்கு  மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையும் மீறி அவ்வப்போது அரிய வகை டால்பின்கள் உயிரிழந்து கரை ஒதுங்கி வருகின்றன.

பாம்பன் குந்துகாலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பின் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில் இன்று காலை சுமார் 2 மீட்டர் நீளம் கொண்ட டால்பின் ஒன்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. இதன் வால் பகுதி முழுமையாக சேதமடைந்ததால் இது ஆணா, பெண்ணா என அறிய முடியாத நிலையில் காணப்பட்டது. கப்பல் அல்லது பாறையில் மோதியதால் நீந்த முடியாத நிலையில் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது.  தகவல் அறிந்த வன உயிரின பாதுகாப்பு அலுவலர் சதீஷ் உள்ளிட்டோர் குந்துகால் பகுதிக்கு வந்து கரை ஒதுங்கிய டால்பினை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் கடற்கரை மணலில் புதைத்தனர்