வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (10/05/2018)

கடைசி தொடர்பு:03:30 (10/05/2018)

வீரசக்கதேவி ஆலய திருவிழா - தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நாட்கள் 144 தடை உத்தரவு!

பாஞ்சாலங்குறிச்சி, வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு நாளை 10.05.18 முதல் 12.10.18ம் தேதி வரை 3 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் (பொ) வீரப்பன் உத்தரவிட்டுள்ளார்.

பாஞ்சாலங்குறிச்சி, வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு இன்று (மே 10) முதல்  மே 12-ம் தேதி வரை 3 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் (பொ) வீரப்பன் உத்தரவிட்டுள்ளார்.

வீரசக்கதேவி

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வரும் 11.05.2018 மற்றும் 12.05.2018 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள விரசக்கதேவி ஆலய திருவிழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், veerappan10.05.2018 மாலை 6.00 மணி முதல் 13.05.2018 காலை 6.00 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

இதன்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும்,  தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு போன்ற அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் ஊர்வலமாகக் கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருப்பின், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இத்தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு ஊர்வலங்கள் மற்றும் கோவில்பட்டியில் நடைபெறும் அரசு விழா ஆகியவற்றிற்குப் பொருந்தாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க