"துணை ராணுவப்படையை அனுப்பி வெள்ளோட்டம் பார்க்கிறார்கள்" -பெ.மணியரசன் குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, அதிரடியான போராட்டங்களை நடத்திவரும் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் அடுத்தகட்டமாக, ‘ராணுவத்தை அனுப்பாதே... காவிரி நீரை அனுப்பு” என்ற முழக்கத்தை முன் வைத்து தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த ஆயத்தமாகிவருகிறார்கள்.  

காவிரி உரிமை மீட்புக்குழு கூட்டம்

இப்போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பு மக்களையும் பங்கெடுக்கச் செய்வதற்காக, பல கிராமங்களில் காவிரி உரிமை மீட்புக் குழுவினரின் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். ’மத்திய அரசு நடுநிலை தவறி, இனப் பாகுபாடு காட்டி, தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை வேண்டுமென்றே இழுத்தடித்து, வாய்தா வாங்கிக்கொண்டே இருக்கிறது. இதனால், தமிழ்நாட்டு மக்கள் பெரும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். குறிப்பாக, காவிரி டெல்டா மக்கள் வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்கள். இது போதாதென்று, இப்பகுதி மக்களின் மனங்களை மேலும் காயப்படுத்தும் விதமாக, காவிரி டெல்டாவுக்கு அதிவிரைவு ராணுவப் படையை அனுப்பி, மத்திய அரசு வெள்ளோட்டம் பார்க்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும்  ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு இந்திய ராணுவ விமானப்படைத்தளத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தவுள்ளோம்” எனக் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தெரிவித்தார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!