கடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட துப்புரவு தொழிலாளர்கள்!

கடலூர் நகராட்சி ஆணையரிடம் பல முறை மனுக்கள் கொடுத்தும் சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.

 

கடலூர் நகராட்சி, காவல் நிலையம் முற்றுகை

கடலூர் நகராட்சியில் துப்புரவு பணி ஒப்பந்தம் விடப்பட்டு  தனியார் மூலமாக நடந்து வருகிறது. இந்தத் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள  42 தொழிலாளர்களுக்குக்  கடந்த 9 மாதங்களாகச்  சம்பளம் வழங்கவில்லை. இதுகுறித்து கடலூர் நகராட்சி ஆணையரிடம் பல முறை மனுக்கள் கொடுத்தும், சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் துப்புரவு தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து கடலூர் புது நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் காவல் நிலையம் சென்று பேசிக்கொள்ளலாம் எனக்கூறி அங்கு அழைத்துச்  சென்றனர். அங்குச்  சென்ற துப்புரவு பணியாளர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்பு போலீஸார் தனியார் ஒப்பந்த நிர்வாகத்திடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளனர். இதனை ஏற்றுக் கலைந்து சென்ற துப்புரவு பணியாளர்கள் உடன் தீர்வு காணாவிட்டால் வேலை நிறுத்தப்  போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!