வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (10/05/2018)

கடைசி தொடர்பு:11:43 (10/05/2018)

`காலா’ நிகழ்ச்சி முடிந்து ஊர் திரும்பிய ரஜினி ரசிகருக்கு ரயில் பயணத்தில் நடந்த துயரம்!

காலா இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த ரஜினி ரசிகர் ரயில் பயணத்தின்போது தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள `காலா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு வெளியாகும் முதல் படம் என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. காலா இசை வெளியீட்டு விழாவுக்காகத் தமிழகம் முழுவதிலுமிருந்து அவரது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்துகொண்டார்கள். இசை வெளியீட்டு விழாவை முடித்துக்கொண்டு ரயிலிலும் பேருந்திலும் ரசிகர்கள் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள்.

காலா, ரஜினி ரசிகர் ரயில் விபத்து

சென்னையிலிருந்து நேற்று இரவு மதுரை சென்ற ரயிலில், மதுரையைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் என்பவர் பயணம் செய்தார். ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர் படிக்கட்டில் அமர்ந்து சென்றார். படிக்கட்டில் அமர வேண்டாம் என அருகில் இருந்தவர்கள் சொல்லியும், அதைக் கண்டுகொள்ளவில்லை. ரயில், நேற்று இரவு 2.30 மணிக்கு மறைமலைநகர் ரயில் நிலையம் வரும்போது, நடைமேடையில் அவரின் கால் உரசியது. இதனால் அவரது இரண்டு கால்களும் துண்டானது. அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட  அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தாம்பரம் ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மது போதையில் அவர் பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க