நாகை இளைஞர், வயரை தானே தொட்டு இறந்ததாக போலீஸ் விளக்கம்!

நாகை இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானது குறித்து போலீசார் விளக்கம்

நாகை இளைஞர், வயரை தானே தொட்டு இறந்ததாக போலீஸ் விளக்கம்!

நாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (37). இவரின் தம்பி ராஜூ (30). இருவரும் கொத்தனார் வேலைபார்த்துவந்தனர். கணேசனுக்கு சத்யா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். ஓர் ஆண்டுக்கு முன் திருமணமான ராஜுவின் மனைவி விஜயா, தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று முன்தினம் ராஜூ, தன் சகோதரர் கணேசனைப் பார்க்க அவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்  அப்போது, கேபிள் இணைக்கப்பட்ட.மின்சார போர்டை  ரிப்பேர் பார்த்துக்கொண்டிருந்த கணேசனை மின்சாரம் தாக்கியது. இதில், கணேசன் இறந்துபோனார். 'சகோதரர் கணேசனை மின்சாரம் தாக்கியது எப்படி? எனறு தம்பி ராஜூவிடம் போலீஸார் நடித்துக் காட்டச்  சொல்ல, அதனால் பதற்றம் காரணமாக மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த கேபிள் வயரை  ராஜூவும் தொட, அவரும் உயிரிழந்ததாகச் சொல்லப்பட்டது. 

மின்சாரம் தாக்கி பலியான நாகை இளைஞர்

இந்நிலையில் கீழ்வேளுர் போலீஸார், தாங்கள் விசாரிக்கும்போது மின்சாரம் தாக்கி ராஜூ பலியாகவில்லை என்று மறுத்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ''டி.வி கேபிள் வயரில் மின்சாரம் பாய்ந்து கணேசன் தூக்கி வீசப்பட்டார். அருகேயிருந்த தம்பி ராஜூ, எந்த வயரில் மின்சாரம் பாய்கிறது என்று கூறியவாறு அதைத்  தொட்டுள்ளார்.  அதனால், அவரையும் மின்சாரம் தாக்கியது. இருவரையும் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்'' என்று கூறியுள்ளனர். 

சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!