வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (10/05/2018)

கடைசி தொடர்பு:13:40 (10/05/2018)

க்ரெட்டா ஃபோஸ்லிஃப்ட் மாடலின் வேரியன்ட் பட்டியல் வெளியானது! புதுசா என்ன இருக்கு?

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் க்ரெட்டா ஃபோஸ்லிஃப்ட் மாடலின் வேரியன்ட் மற்றும் வசதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் க்ரெட்டா ஃபோஸ்லிஃப்ட் மாடலின் வேரியன்ட் மற்றும் வசதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. தற்போது உள்ள க்ரெட்டாவை விட கூடுதலான வசதிகள் கிடைக்க உள்ளது தெரியவந்துள்ளது. க்ரெட்டா ஃபோஸ்லிஃப்ட்டில் என்னென்ன வசதிகள் வருகிறது என்று பார்ப்போம்.

 E, E+, S, SX, SX dual tone மற்றும் SX(O) என மொத்தம் 6 வேரியன்டுகளில் வருகிறது க்ரெட்டா. இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸை பொறுத்தவரை, அதே 90 bhp பவர் தரக்கூடிய 1.4 லிட்டர் டீசல் இன்ஜின், 123 bhp பவர் தரக்கூடிய 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 128 bhp பவர் தரக்கூடிய 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் வருகிறது. இதில் 1.4 லிட்டர் இன்ஜின், மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே வருகிறது. 1.6 லிட்டர் இன்ஜினில் மேனுவல் மற்றும் ஆட்டோமெடிக் உண்டு.

ஹூண்டாய் க்ரெட்டா ஃபோஸ்லிஃப்ட்/facelift

வசதிகள்

புதிய க்ரெட்டாவில், 2 ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் அனைத்து வேரியன்டிலும் வருகின்றன. இதுதவிர, சில வேரியன்டில் டேஷ் போர்டில் சிறிய மாற்றங்கள் உள்ளன.

 E

123bhp பவர் தரக்கூடிய 1.6 பெட்ரோல் இன்ஜின் மட்டுமே உள்ளது.

அனைத்துப் பக்கமும் பவர் விண்டோ உள்ளது

டிரைவர் சீட் உயரத்தை மாற்றமுடியும்

16 இன்ச் ஸ்டீல் வீல்

முன் சீட்டில் மடித்துக்கொள்ளக்கூடிய  Armrest

E+

123bhp பவர் தரக்கூடிய 1.6 பெட்ரோல் மற்றும் 90 bhp பவர் தரக்கூடிய 1.4 டீசல் இன்ஜின் ஆப்ஷன் வருகிறது.

 E வேரியன்டை விட கூடுதலாக

 USB சார்ஜர்

ப்ளூடூத் ஆடியோ சிஸ்டம்

S

1.4 டீசல் மற்றும் 1.6 டீசல் ஆட்டோமெடிக் இன்ஜின் ஆப்ஷன் உள்ளது

 LED DRL

USB சார்ஜர்

ப்ளூடூத் ஆடியோ சிஸ்டம் 

பார்க்கிங் சென்சாருடன் கூடிய ரிவர்ஸ் கேமரா உள்ளது

SX

1.6 லிட்டர் பெட்ரோல் (மேனுவல் மற்றும் ஆட்டோமெடிக்), 1.6 லிட்டர் டீசல் (மேனுவல் மற்றும் ஆட்டோமெடிக்)

 Shark-fin antenna

17-இன்ச் அலாய் வீல் (ஆட்டோமெடிக்கில் மட்டும்)

16-இன்ச் அலாய் வீல் (மேனுவல்)

ப்ரெஜக்டர் ஹெட்லைட்

திறக்கக்கூடிய சன்ரூஃப் (ஆட்டோமெடிக்கில் மட்டும்)

க்ரூஸ் கன்ட்ரோல்

 LED positioning lamps

LED DRL

ஸ்மார்ட் கீ

 USB சார்ஜிங்

 Arkamys சவுண்ட் சிஸ்டம்

ஏசி துர்நாற்றத்தை போக்க  Cluster ioniser

ஸ்மார்ட்ஃபோன் இணைக்கக்கூடிய,  IPS டிஸ்ப்ளே உடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

ஹூண்டாய்  Autolink வசதி (ஆட்டோமெடிக்)

 Static bending லைட்டுகள்

குழந்தைகள் சீட்டுக்கான  Isofix மவுன்ட் (ஆட்டோமெடிக்)

 SX (dual tone)

1.6 பெட்ரோல் மற்றும் 1.6 டீசல். ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் கிடையாது. 

 Shark-fin antenna

17-இன்ச் அலாய் வீல் 

ப்ரெஜக்டர் ஹெட்லைட்

க்ரூஸ் கன்ட்ரோல்

 LED positioning lamps

LED DRL

ஸ்மார்ட் கீ

 USB சார்ஜிங்

 Arkamys சவுண்ட் சிஸ்டம்

ஏசி துர்நாற்றத்தைப் போக்க

Cluster ioniser

ஸ்மார்ட்போன் இணைக்கக்கூடிய,  IPS டிஸ்ப்ளே உடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

ஹூண்டாய்  Autolink வசதி (ஆட்டோமெடிக்)

 Static bending லைட்டுகள்

குழந்தைகள் சீட்டுக்கான  Isofix மவுன்ட் (ஆட்டோமெடிக்)

 SX (O)

1.6 பெட்ரோல் மற்றும் 1.6 டீசல் (ஆட்டோமெடிக் கிடையாது)

 SX மாடலை விட கூடுதலாக

திறக்கக்கூடிய சன்ரூஃப்

6 விதமாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பவர் டிரைவர் சீட்

6 ஏர்பேக்

ஸ்மார்ட் கீ வசதி

 Wireless charging 

Electro chromic mirror போன்றவை உள்ளன.

ஹூண்டாய் க்ரெட்டா ஃபோஸ்லிஃப்ட்/facelift

வெளிப்புற மாற்றங்கள்?

புதிய க்ரெட்டாவில் வசதிகள் மட்டுமல்ல சில வெளிப்பக்க ஸ்டைல் மாற்றங்களும் உள்ளன. பெரிய அறுங்கோண வடிவ க்ரில், அதைச் சுற்றி க்ரோம், மெல்லிசான பனி விளக்குகள் பொருந்திய புதிய பம்பர், காரின் கொழுக்மொழுக் கன்னம் போல இருக்கும் ஹெட்லைட்டுக்கும், பனி விளக்குக்கும் இடையில் உள்ள பகுதி என முன்பக்கத்தில் சில மாற்றங்கள் உள்ளன. காரின் பின்பக்கம் புதிதாக எல்ஈடி லைட்டுகள் வருகின்றன. பம்பர் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. இதைத் தவிர அலாய் வீல்கள் அனைத்தும் டைமண்ட் கட் ஸ்டைல். கறுப்பு-வெள்ளை மற்றும் ஆரஞ்சு-கறுப்பு என இரண்டு டூயல் டோன் நிறங்கள் புதிது. 

ஹூண்டாய் க்ரெட்டாவின் முன்பதிவுகள் ஆரம்பித்துவிட்டன. காரின் டெலிவரி இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் கிடைக்கும் என டீலர்கள் நம்பிக்கையளிக்கிறார்கள்.