வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (10/05/2018)

கடைசி தொடர்பு:14:40 (10/05/2018)

மாட்டுவண்டிப் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்!

கோவில்பட்டி அருகில் உள்ள துறையூர் ஸ்ரீ வெயிலுகந்த அம்மன் திருக்கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. இதில் 2 பிரிவுகளில் மொத்தம் 19 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள துறையூர் ஸ்ரீ வெயிலுகந்த அம்மன் திருக்கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. இதில், பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என்ற 2 பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.  இதில் 2 பிரிவுகளில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 13 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன. 

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மாட்டுவண்டிப் போட்டிகளை கொடியைசத்து தொடங்கி வைத்தார். துறையூரில் இருந்து பாண்டவர்மங்கலம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம்  கொண்ட பெரிய மாட்டுவண்டிப் போட்டியில் 6 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இந்தப் போட்டியில் சங்கரபேரியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவரது மாட்டு வண்டி முதலிடத்தையும், ஈராச்சியைச் சேர்ந்த சிவகிரி என்பவரது  மாட்டு வண்டி 2-வது இடத்தையும், தெற்கு வண்டானம் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரனின் மாட்டு வண்டி  3-வது இடத்தையும் பிடித்தன.

துறையூரில் இருந்து கிழவிபட்டி வரையிலான 6 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சிறிய மாட்டு வண்டி போட்டியில் 13 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இதில் சித்தவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரது மாட்டு வண்டி முதலிடத்தையும், மறுகால்குறிச்சியைச் சேர்ந்த பொன்னையன் என்பவரது மாட்டு வண்டி 2-வது இடத்தையும், இடைச்சூருணியைச் சேர்ந்த  மகிமா என்பவரது மாட்டு வண்டி 3-வது இடத்தையும் பிடித்தன.

இதில் பெரிய மாட்டு வண்டிப் போட்டியில் முதலிடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ரூ.21,001-ம், 2-வது இடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ரூ.18,001-ம், 3-வது இடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ரூ.15,001-ம் வழங்கப்பட்டன. இதேபோன்று சின்ன மாட்டு வண்டிப் போட்டியில் முதலிடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ரூ.15,001-ம், 2-வது இடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ரூ.13,001-ம், 3-வது இடம் பிடித்த மாட்டு வண்டிக்கு ரூ.11,001-ம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க