வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (10/05/2018)

கடைசி தொடர்பு:15:40 (10/05/2018)

பி.இ விண்ணப்பக் கட்டணம்! அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பக் கட்டணத்தை பே-ஆர்டர் மற்றும் வரைவோலை மூலம் கட்டலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மேலும், விண்ணப்பக் கட்டணத்தை நேரடியாகப் பணமாக அளிக்க முடியாது. பே-ஆர்டர், வரைவோலை மூலமாகக் கட்டணம் செலுத்தலாம். கிராமப் புற மாணவர்களுக்காக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு 42 இடங்களில் இ-சேவை மையம்  அமைக்கப்பட்டு 30 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.