வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (10/05/2018)

கடைசி தொடர்பு:17:40 (10/05/2018)

ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் தேவையா? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

சுப்ரீம் கோர்ட்டால் கிரிமினல் எனக் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 100 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டுகிறார்கள். ஆனால், ஒகியில் இறந்த மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள் என நாம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவ சகாயம் காட்டமாகத் தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டால் கிரிமினல் எனக் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 50 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டுகிறார்கள். ஆனால், ஒகியில் இறந்த மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள் என ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் காட்டமாகத் தெரிவித்தார்.

நாம் குமரி மக்கள் அமைப்பின் நிறுவனர் ஜெகத்கஸ்பர், தலைவர் தேவசகாயம் ஐ.ஏ.எஸ். ஆகியோர் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

நாம் குமரி மக்கள் அமைப்பின் நிறுவனர் ஜெகத்கஸ்பர், தலைவர் தேவசகாயம் ஐ.ஏ.எஸ். ஆகியோர் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம் கூறுகையில், ``ஒகி புயல் கடந்து 150 நாள்கள் ஆகிவிட்டன. ஒகி புயல் பாதித்தபோது டெல்லியில் கட்டுப்பாட்டு அறை செயல்படவில்லை. சென்னையிலும் கட்டுப்பாட்டு அறை சரியாகச் செயல்படவில்லை. ஒகியில் இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். விவசாயி மற்றும் மீனவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பன்னாட்டுச் சரக்குப்பெட்டக மாற்று முனையத்தை குமரி மாவட்டத்தில் செயற்கைப் பேரிடராகத் திணிக்கக் கூடாது. குமரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவு 38 டிகிரி வெப்பம் ஏற்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4 டிகிரி அதிகமாகும். ஓர் ஆண்டில் 4 டிகிரி வெப்பம் அதிகரித்திருப்பது அடுத்த பேரிடருக்கான எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். மாவட்டத்தை குளிர்விக்கும் விதமாக 20 லட்சம் மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், மலைகளை உடைத்து கருங்கல்களை கேரளாவுக்குக் கடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒகி புயல் நிவாரணமாக தமிழக அரசு 9,000 கோடி ரூபாய் கேட்டது. ஆனால், மத்திய அரசு 133 கோடிதான் ஒதுக்கியது. வாழை விவசாயம் செய்தவர்களில் 80 சதவிகிதம் விவசாயிகள் கூலிகளாக மாறிவிட்டனர்.

நாம் குமரி மக்கள் அமைப்பின் நிறுவனர் ஜெகத்கஸ்பர், தலைவர் தேவசகாயம் ஐ.ஏ.எஸ். ஆகியோர் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டால் கிரிமினல் எனக் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 50 கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டுகிறார்கள். ஆனால், ஒகியில் இறந்த மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். ஒகி புயல் பாதித்த விவசாயிகள், மீனவர்கள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு ஏற்பட்ட 6,000 கோடி ரூபாய் இழப்பை வழங்காமல் இருட்டடிப்பு செய்யும் மத்திய -மாநில அரசுகளைக் கண்டித்து வரும் 12ம் தேதி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்" என்றார்.