ஸ்ரீதத்தாத்ரேயர் ஜயந்தி அனுஷ்டி!

ஸ்ரீதத்தாத்ரேய ஜயந்தி இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. சிவன், பெருமாள், பிரம்மா என்ற மும்மூர்த்திகளின் அம்சமான ஸ்ரீதத்தாத்ரேயர் நீதி நெறிகளைக் காக்கவும் மனிதர்களை நல்வழிப் படுத்தவும் ஞான குருவாக அவதரித்தவர். ஆன்மிக நூல்கள் அவரை ‘ஸ்ரீகுரு தேவதத்தா’ என்று குறிப்பிடுகிறது. நித்ய சிரஞ்சீவியான இவரை இன்று வணங்கி ஞானமும் அமைதியும் பெறலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் என்ற ஊர் அவரது அவதாரத் தலமாகச் சொல்லப்படுகிறது. சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமியை வணங்கினால் ஸ்ரீதத்தாத்ரேயரை வணங்கிய பேறு கிடைக்கும்.

ஸ்ரீதத்தாத்ரேயர்

சிறந்த ஞானமும் கல்வியும் பெற விரும்புவோர் ஸ்ரீதத்தாத்ரேயரை வணங்கி அருள் பெறலாம். காணும் இடமெங்கும் நன்மைகளைக் கற்கலாம் என்று போதித்த ஸ்ரீதத்தாத்ரேயர் கார்த்த வீரியார்ஜுன மந்திரத்தின் பிதாமகர். இவரே பரசுராமருக்கு ஸ்ரீவித்யா உபாசனை உள்ளிட்ட மந்திரங்களைக் கற்றுக்கொடுத்தவர். அனுசுயா தேவி மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கி பாலூட்டியபோது அங்கு வந்த அவரின் கணவர் அத்திரி மகரிஷி அந்தக் குழந்தைகளை அணைத்து ஒரே உருவாக உருவாக்கினார். அந்த உருவே ஸ்ரீதத்தாத்ரேயர் அவதாரமானது. எளிமையின் வடிவமான ஸ்ரீதத்தாத்ரேயரை இந்நாளில் வணங்கி தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம் சொல்லி ஞான அருள் பெறுவோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!