வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (10/05/2018)

கடைசி தொடர்பு:17:50 (10/05/2018)

கணவரைக் கொடூரமாகக் கொல்வதற்கு உதவிய மனைவி! ஒரு மாதத்துக்குப் பின் சிக்கிய 4 காதலர்கள்

நான்கு காதலர்களுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண் கோவாவில் கைது செய்யப்பட்டார்.

கணவரைக் கொடூரமாகக் கொல்வதற்கு உதவிய மனைவி! ஒரு மாதத்துக்குப் பின் சிக்கிய 4 காதலர்கள்

கோவாவில் நான்கு காதலர்களுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். 

கணவர் கொலை காதலர்களுடன் பெண் கைது

கர்நாடகாவைச் சேர்ந்தவர் பசவராஜ் பாரிகி (வயது 38). இவரின் மனைவி கல்பனா (வயது 30). கோவாவில் கர்சோரம் என்ற பகுதியில் இவர்கள் வசித்து வந்தனர். டாக்ஸி டிரைவரான பசவராஜ் 15 நாள்களுக்கு ஒரு முறைதான் வீட்டுக்கு வருவார் என்று சொல்லப்படுகிறது. மனைவி கல்பனாவுக்கு நான்கு காதலர்கள் இருந்துள்ளனர். இதனால், மனைவியுடன் அடிக்கடி பசவராஜ் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கணவர் தன்னிடம் சண்டை போடுவது குறித்து கல்பனா தன் காதலர்களிடம் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி வீட்டுக்கு வந்த பசவராஜ் வழக்கம்போல் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். அந்தச் சமயத்தில் காதலர்களை கல்பனா வரவழைத்தார். பின், கணவரைக் கொலை செய்யும் ஐடியாவைக் கூறினார். பசவராஜ், உறங்கிய பின் அவரைக் கயிற்றால் கட்டிப்போட்டு கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். பின்னர், உடலை மூன்று துண்டுகளாக வெட்டி சாக்குப் பையில் அடைத்து கோவாவில் மூன்று பகுதிகளில் வீசி விட்டு ஓடி விட்டனர். 

பசவராஜூக்கு மனைவியைத் தவிர கோவாவில் வேறு எந்த உறவினரும் இல்லாததால், யாரும் போலீஸில் புகார் அளிக்கவில்லை. கணவரைக் கொன்று விட்டு, மனைவி அதே வீட்டில் வசித்துள்ளார். இந்நிலையில், மலைப் பகுதியில் மனித உடல் பகுதி கிடப்பதாக போலீஸாருக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில், விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கணவரை கல்பனா, காதலர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. காதலர்கள் சுரேஷ்குமார், பங்கஜ் குமார், அப்துல் ஷேக் ஆகியோரும் பிடிபட்டனர். நான்காவது நபரான ஆதித்யா குஜ்ஜார் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். 

கல்பனாவிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது. பசவராஜின் உடல் பகுதிகளை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க