கரூர் பேருந்து நிலையத்தில் குடிபோதை ஒழிப்பு பிரசாரம்! ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்!

  குடிபோதை விழிப்பு உணர்வு

கரூர் பேருந்து நிலையத்தில் குடிபோதை ஒழிப்பு பிரசாரம் மற்றும் கையெழுத்திடும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் கையொப்பமிட்டுத் தொடங்கி வைத்தார். 

கரூர் பேருந்து நிலையத்தில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மற்றும் சிகரம் குடிபோதை மறு வாழ்வு மையம் இணைந்து நடத்திய குடிபோதை ஒழிப்பு விழிப்பு உணர்வு பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர், "சமுதாயத்தில் தவறான பழக்கமான குடிபோதைக்கு அடிமையாகிச் சிக்கி தவிப்பவர்களை மீட்கவும், அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கவும் அது தொடர்பாக வழிகாட்டவும் மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலகு, சமூக பாதுகாப்புத்துறை மற்றும் தாந்தோணியில் அமைந்துள்ள சிகரம் குடிபோதை மறு வாழ்வு மையம் இணைந்து விழிப்ப உணர்வு பிரசாரம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர். இந்நிகழ்ச்சி 2 நாள்கள் நடக்கிறது. மேலும், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து அதன் மூலம் 257056 என்ற எண்ணில் குழந்தைப் பாதுகாப்பு அலுவலகத்துக்கோ அல்லது 9382232323 என்ற எண்ணில் சிகரம் மறுவாழ்வு மையத்துக்கோ தொடர்புகொண்டு ஆலோசனைகள் மற்றும் கட்டணமில்லாமல் சிகிக்சை பெற்றுக்கொள்ளலாம். இதேபோல்,15.5.2018 மற்றும் 16.5.2018 ஆகிய 2 நாள்கள் குளித்தலை பேருந்து நிலையத்தில் விழிப்பு உணர்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் இந்த விழிப்பு உணர்வு செய்தியை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி குழந்தைகளைப்
போதை வஸ்துக்கள் விற்கத் தூண்டாமலும் அந்தப் பழக்கத்துக்கு ஆளாகாமலும் தடுத்திட ஊதவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!