வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (11/05/2018)

கடைசி தொடர்பு:08:30 (11/05/2018)

சின்ன முட்டம் மீனவர் கிராமத்தில் மோதல்; 70 பேர் மீது வழக்குப்பதிவு!

பங்குபேரவை தேர்தல் சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் மீனவர் கிராமத்தில் ஏற்பட்ட மோதலில் 13பேர் காயம் அடைந்தனர். 70 பேர் மீது வழக்குபதிவு செய்யப்படுள்ளது.

ங்குப் பேரவைத் தேர்தல் சம்பந்தமாக கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் மீனவர் கிராமத்தில் ஏற்பட்ட மோதலில், 13பேர் காயம் அடைந்தனர். 70 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மோதல்

கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் மீனவ கிராமத்தில் சர்ச் பங்குப் பேரவைத் தேர்தல் நேற்று நடந்தது. இதில் ஏற்கெனவே பதவியில் இருக்கும் சில்வெஸ்டர் அணியும், சௌந்தர்ராஜன் அணியும் போட்டியிட்டது. தேர்தலில் மீண்டும் சில்வெஸ்டர் அணி வெற்றிபெற்றிருக்கிறது. சில்வெஸ்டர் அணியில் கணக்கராக வெற்றிபெற்றவர், 3-ம் வகுப்பு வரைதான் படித்திருப்பதாகவும். கணக்குகள் பார்ப்பவர் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும் எனவும் சௌந்தர் ராஜன் தரப்பினர் குரல்கொடுத்திருக்கிறார்கள். இதனால், இரண்டு அணியினரிடையே மோதல் ஏற்பட்டது. இரு கோஷ்டியினரும் கம்பாலும், கற்களாலும் மாறிமாறித் தாக்கியுள்ளனர். இதில், 13 பேர் காயம் அடைந்தனர். மோதல்குறித்து தகவல் அறிந்ததும் அதிரடிப்படை போலீஸ் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி சௌந்தர் ராஜன் மற்றும் அவரது கோஷ்டியைச் சேர்ந்த 50 பேர்மீது வழக்குப்பதிவு செய்தனர். சில்வெஸ்டர் மற்றும் அவரது கோஷ்டியைச் சேர்ந்த 15 பேர் மற்றும்  5 பேர் என மொத்தம் 70 பேர்மீது வழக்குப்பதிவு செய்தனர்.  மேலும், மோதல் ஏற்படாமல் இருக்க சின்னமுட்டம் கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க