வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (11/05/2018)

கடைசி தொடர்பு:10:46 (11/05/2018)

சிறுத்தைப்புலிக்கு `சீத்தா’... ரகத்திற்கு `நகம்’... தமிழ் வினாத்தாளில் பிழைகள்... நீட் பரிதாபங்கள்!

சிறுத்தைப்புலியைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையை, ”சீத்தா” என துணிச்சலாக! மொழிபெயர்த்து வினாக்களாக வழங்குவதும் தற்செயலான விஷயங்கள்தானா?  சிறுத்தைப்புலியைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையை, ”சீத்தா” என துணிச்சலாக! மொழிபெயர்த்து வினாக்களாக வழங்குவதும் தற்செயலான விஷயங்கள்தானா?  சிறுத்தைப்புலியைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையை, ”சீத்தா” என துணிச்சலாக! மொழிபெயர்த்து வினாக்களாக வழங்குவதும் தற்செயலான விஷயங்கள்தானா?  சிறுத்தைப்புலியைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையை, ”சீத்தா” என துணிச்சலாக! மொழிபெயர்த்து வினாக்களாக வழங்குவதும் தற்செயலான விஷயங்கள்தானா?  சிறுத்தைப்புலியைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையை, ”சீத்தா” என துணிச்சலாக! மொழிபெயர்த்து வினாக்களாக வழங்குவதும் தற்செயலான விஷயங்கள்தானா? 

சிறுத்தைப்புலிக்கு `சீத்தா’... ரகத்திற்கு `நகம்’... தமிழ் வினாத்தாளில் பிழைகள்... நீட் பரிதாபங்கள்!

மதுரை மாவட்டம் நரிமேடு நாய்ஸ் பள்ளியில், இந்தமுறை தமிழ் வழியில் நீட் தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தமிழ் வழியில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தது. அதிர்ந்த மாணவர்கள் புகார் தெரிவித்த பிறகு, 96 பேருக்கு மட்டும் பிற்பகலில் தமிழில் வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வெழுத அனுமதிக்கப்பட்டது. 2.50 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5.50 மணிக்கு வரை நடைபெற்றதுடன், `வினாத்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்டதால், எங்களுக்கு எந்தவிதமான மன உளைச்சலும் ஏற்படவில்லை’ என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட படிவத்தில் மாணவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. தேர்வு முடிந்து வெளியில் வந்த மாணவர்கள் சிலருக்கு, எதற்காக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட படிவத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது என்பதே தெரியவில்லை.

நீட்

இந்நிலையில், `டெக் ஃபார் ஆல்’ என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம், நீட் தமிழ் வினாத்தாளில் இருக்கும் குளறுபடிகளைப் பட்டியலிட்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தியது. மொத்தம் கேட்கப்பட்ட 180 கேள்விகளில், 49 கேள்விகளில் பிழைகள் இருப்பதாகத் தெரிவிக்கிறார் `டெக் ஃபார் ஆல்’ நிறுவனர் ஜி.எம் ராம் பிரகாஷ். 49 கேள்விகளில், இயற்பியலில்10, வேதியியலில் 6, உயிரியலில் 37 என மொத்தமாக 68 பிழைகளைப் பட்டியலிட்டுள்ளது `டெக் ஃபார் ஆல்’.

உதாரணமாக, 75-ம் கேள்வியில், சிறுத்தையைக் குறிக்கும் `Cheetah' என்னும் சொல், `சீத்தா’ என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. `வெளவால்’ என்று குறிப்பிடப்படவேண்டிய வார்த்தை `வவ்நவல்’ என தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கேள்வியில், `பல் கூட்டு அல்லீல்கள்’ என இருக்கவேண்டிய சொல், `பல குட்டு அல்லீல்கள்’ என்று இருக்கிறது. `ரகம்’ என்று வந்திருக்கவேண்டிய சொல்லுக்கு `நகம்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, வினாத்தாளின் முதல் பகுதியிலேயே ஒரு `பொறுப்புத்துறப்பு ’(Disclaimer) இருக்கிறது. `மொழிபெயர்ப்பில் சந்தேகமான வார்த்தைகள் இருப்பின், அந்தக் கேள்விகளின் பதில்களை ஏற்பதில் ஆங்கில வினாக்களின் பொருள்தான் முடிவில் ஏற்றுக்கொள்ளப்படும். தமிழில் தேர்வை எழுதும் மாணவர்கள், இதை உணர்ந்துகொள்ள வேண்டும்’ என்கிறது `பொறுப்புத்துறப்பு!’.

நீட்

``ஆன்லைன் வழியாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய 3,000 மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி கொடுத்திருக்கிறோம். ஏதோ மிகச்சிறிய பிழைகள் தெரியாமல் நடந்திருந்தால், மாணவர்களால் அதைச் சமாளிக்கமுடியும். பிற மாணவர்களைப் போலவே, அதே நேரத்தில் தேர்வை எதிர்கொண்ட தமிழ்வழித் தேர்வெழுதிய மாணவர்கள், இத்தனை பிழைகளை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்? சி.பி.எஸ்.இ தரப்பில் நிகழ்ந்த தவறுகளுக்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ் வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நீதி. மேலும், என்.சி.ஈ.ஆர்.டி பாடத்திட்டத்தில் தமிழ்வழிப் புத்தகங்கள் இல்லாமல் இருப்பதே இத்தகைய பொருளற்ற பிழைகளுக்குக் காரணம்” என்றார் ராம் பிரகாஷ்.

தமிழில் தேர்வெழுத வந்தவர்களிடம், `வினாத்தாள் வரும் வரை டீ, பிஸ்கட் சாப்பிட்டோம். தாமதமானதால் மன உளைச்சல் ஏற்படவில்லை’ என்று ஆங்கிலத்தில் அச்சிட்டு கையெழுத்து வாங்குவதும், சிறுத்தைப்புலியைக் குறிக்கும் ஆங்கில வார்த்தையை, `சீத்தா’ என துணிச்சலாக (!) மொழிபெயர்த்திருப்பது தற்செயலானவைதானா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்