ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆளுநர் தரிசனம்! கறுப்புக்கொடி காட்டிய தி.மு.க-வினர் கைது

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று விருதுநகர் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார்.

விருதுநகர்

சென்னையிலிருந்து இன்று காலை 7.15 மணிக்கு மதுரைக்கு விமானம் மூலம் வந்த ஆளுநர், அங்கிருந்து விருதுநகர் மாவட்டத்துக்கு சாலை வழியாகச் சென்றார். ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றவர், சிறிது நேரம் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்துவிட்டு ஆண்டாள் கோயிலுக்குச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை சூழ்ந்திருக்கும் பிணிகள் நீங்க ஒரு மணி நேரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து கிளம்பி விருதுநகர் விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு பொதுமக்களிடம் மனுக்களை வாங்குகிறார். பிறகு, மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். மாலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

இந்த நிலையில் ஆளுநரின் வருகைக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு தலைமையில் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டம் செய்ய அவர்கள் கேட்ட இடத்தைக் கொடுக்காமல் சிவகாசி சாலை பக்கம் இடம் ஒதுக்கியிருந்தது காவல்துறை. அப்படி இருந்தும் ஏராளமானபேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கைதானார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!