சூர்யாவுடன் இணையும் மோகன்லால்!

செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் 'என்.ஜி.கே' படம் உருவாகிவருகிறது. இதைத் தொடர்ந்து, இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில், கே.வி.ஆனந்த் தன் ட்விட்டரில் பதிவிட்டு அதனை உறுதிசெய்தார்.

மோகன்லால் - சூர்யா

இந்நிலையில், இந்தப் படத்தில் மோகன்லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சூர்யா - கே.வி.ஆனந்த் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணிக்கு இது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதத்திலிருந்து இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. 'ஜில்லா' படத்தில் விஜய்யுடன் சேர்ந்து அசத்திய மோகன்லாலுக்கு, இந்தப் படத்தில் என்ன கேரக்டராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!