வெளியிடப்பட்ட நேரம்: 13:38 (11/05/2018)

கடைசி தொடர்பு:13:38 (11/05/2018)

``ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?'' சந்தேகங்களுக்கு விடை தரும் விகடன் வழிகாட்டி!

``ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?'' சந்தேகங்களுக்கு விடை தரும் விகடன் வழிகாட்டி!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், சித்தா போன்ற டாக்டர் படிப்புகளுக்கு தேசிய அளவிலான தகுதிகாண் தேர்வான 'நீட்' தேர்வு தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அந்தத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் கட்-ஆப் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் மாணவ-மாணவியர் சேர்க்கை நடக்கிறது. இந்தப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் மார்க் இருந்தால் போதும்; அட்மிஷனில் குழப்பம் இல்லை. ஆனால், பொறியியல் படிப்பபில் நூற்றுக்கு மேற்பட்ட பிரிவுகள்; கலை அறிவியல் படிப்பில் ஏராளமான பாடப்பிரிவுகள் உள்ளன.  இவற்றில் எந்தப் படிப்பைத் தேர்வு செய்வது? அந்தப் படிப்பை முடித்தால் மாணவர்களின் எதிர்காலம் என்ன? எதைப்படித்தால் அதிக சம்பளத்துடன் உடனே வேலை கிடைக்கும்? வெளிநாடுகளில் என்னென்ன படிப்புகளுக்கு வேலை கிடைக்கும்? வெளிநாடு சென்று என்ன படிக்கலாம்? என்பன போன்ற ஏராளமான கேள்விகள் மாணவர்களிடமும், பெற்றோரிடமும் உள்ளன. 

இப்போது மிகவும் பிரகாசமான வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்படும் படிப்புகள், ஐந்தாண்டுகள் கழித்து ஒன்றுமில்லாமல் போய்விடுமா? இன்று சுமாரான கோர்ஸ் என்று சொல்லப்படும் படிப்புகள் ஐந்து ஆண்டுகள் கழித்து ஏகப்பட்ட டிமாண்டை உண்டுபண்ணிவிடுமா? எனவே, இதுபோன்ற குழப்பம் இல்லாமல் எந்த கோர்ஸைத் தேர்வு செய்து படிப்பது? அதுவும் இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைனில் பொறியியல் கவுன்சலிங் நடத்தப்படுகிறது. எது நல்ல காலேஜ், நல்ல கோர்ஸ்..? அதை செலக்ட் செய்வது எப்படி? என ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடைசொல்வதற்காகவே முகாம் ஒன்றை நடத்துகிறது விகடன். சென்னை தேனாம்பேட்டையில் 'குளுகுளு' ஏ.சி அரங்கமான கலைஞர் அரங்கத்தில் மே 13-ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 'விகடன் கல்வி வழிகாட்டி' நிகழ்ச்சி நடைபெறும்.

கல்வி வழிகாட்டி

விகடன் பிரசுரம் மற்றும் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி ஆகியவற்றின் சார்பில் கலந்துகொள்ளும் வல்லுநர்கள், ப்ளஸ்-டூ மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த இலவச ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். உயர் கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன், பிளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்தப் படிப்பில் மாணவர்கள் சாதிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்குகிறார். துணை மருத்துவப் படிப்புகள், மேலாண்மைக் கல்விப் படிப்புகள், பொறியியல், தொழில்நுட்பக் கல்வி, கலை-அறிவியல் படிப்பு, பொறியியல் கவுன்சலிங் நடைபெறும் முறை ஆகியவை குறித்து அவர் விளக்கம் அளிக்கிறார். திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார்,  எல்லா தேர்வுகளும் முடிந்துவிட்ட நிலையில் எதிர்காலம் குறித்து பதற்றத்தோடு இருக்கும் பெற்றோர்களும் பிள்ளைகளும் தங்களது எதிர்கால படிப்பை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்? அது எத்தகைய கல்லுரியாக இருக்க வேண்டும்? எப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்ய வேண்டும்? என்று வழிகாட்டுகிறார்.

``டிகிரி முடித்த பிறகு, போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றிபெற, உயர்கல்வியில் எந்தெந்தப் பாடங்களை எடுத்துப் படிக்க வேண்டும். மத்திய - மாநில அரசுகள் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., வங்கித் தேர்வு, ரயில்வே தேர்வு, டி.என்.பி.எஸ்.சி தேர்வு போன்ற போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி? அதற்கு எப்போது இருந்து படிக்கத் தொடக்க வேண்டும்'' என்ற போட்டித் தேர்வு படிப்பு குறித்து கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் ஆலோசனை வழங்குகிறார்.  கல்வியாளர் டாக்டர் எஸ்.எஸ்.எம்.அப்துல் மஜித், சட்டத்துறை பேராசிரியர் டாக்டர் கே.நிலாமுதீன் ஆகியோர் உயர்கல்வி மற்றும் அதற்குரிய வேலைவாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார்கள்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கவுன்சலிங்கில், விண்ணப்பப் பதிவு மட்டுமின்றி, பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்வதும், இந்த ஆண்டு முதல், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் கவுன்சலிங்கின் நடைமுறை; விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவுகளை, கணினியில் தேர்வு செய்வது எப்படி என்பன போன்ற நடைமுறைகள் குறித்து இந்த முகாமில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மே 16-ம் தேதி, 'பிளஸ் டூ' ரிசல்ட் வெளி வரும் நிலையில் மே 13-ம் தேதி சென்னையில் நடக்கும் விகடன் கல்வி வழிகாட்டி மாணவர்களின் உயர் கல்விக்கும் எதிர்காலத்துக்குப் பயனுள்ளதாக இருக்கும். பெற்றோர்களும் மாணவர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க