ரஜினி, கமலை அவாய்டு பண்ணுங்க ப்ளீஸ்... கெஞ்சும் அதிகாரிகள்!

ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு அரசு இடங்களில் அனுமதி மறுப்பது தொடர்பாக

ரஜினி, கமல் இருவரின் அரசியல் வருகை மற்ற எல்லோரையும் விட, ஆளுங்கட்சியை அளவுக்கு அதிகமாகவே கலவரப்படுத்திவருகிறது. 'காலா' ஆடியோ ரிலீஸ் அன்று, 'காலா' பாடல்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை வந்தால், அரசு வேடிக்கை பார்க்காது' என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தது நினைவிருக்கலாம். தமிழக அரசைக் கடுமையாக விமர்சிக்காத ரஜினி மீதே பாய்கிறார்கள் என்றால், தினமொரு அறிக்கைமூலம் ஆளுங்கட்சியின் குறைகளைச் சுட்டிக் காட்டிவரும் கமல் குறித்துக் கேட்கவே வேண்டியதில்லை. தினமும் அ.தி.மு.க அமைச்சர்களின் வசை மழையில் நனைந்துவருகிறார் கமல்.

ரஜினி

இதன் தொடர்ச்சியாக, கமல், ரஜினி இருவரின் அமைப்புகள் நடத்தும் கூட்டங்களுக்கு மட்டுமல்ல, இந்த இருவர் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சிக்குமே அரசு மற்றும் மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களைத் தரக் கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

'சமீபத்துல நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த சினிமா தொடர்பான அந்த நிகழ்ச்சியில், கமல் கலந்து கொள்வதாக இருந்தது. விழா ஏற்பாட்டாளர்களிடம் அரங்க நிர்வாகிகள், 'அவரைத் தவிர்க்கலாமே எனத் தொடர்ந்து வலியுறுத்தியதால், கடைசியில் கமல் அந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை' என்கிறார், மக்கள் நீதி மய்ய நிர்வாகி ஒருவர்.

அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, 'அரசு சார்ந்த இடங்களைப் பொது நிகழ்ச்சிக்கு அனுமதிக்கிறபோது சில விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். அந்த விதிமுறைகளுக்குக் கட்டுப்படுகிறவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதில்லை' என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!