போலீஸ் பேரிகார்டுகளில் கொடி கட்டிய காங்கிரஸ் மாவட்டச் செயலாளர்மீது வழக்குப்பதிவு!

காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் நாளை கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக அரசு சொத்தில் கொடி கட்டிய மாவட்ட தலைவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் நாளை கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக அரசு சொத்தில் கொடி கட்டிய மாவட்டத் தலைவர்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

போலீஸ் பேரிக்காட்களிலும் காங்கிரஸ் கொடி கட்டப்பட்டுள்ளது

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், நாளை (மே12) காலை விமானம்மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் வரும் அவருக்கு, மாவட்ட எல்லையான ஊரம்பு பகுதியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. திக்கணங்கோடு பகுதியில் காலை 10 மணிக்கு நடக்கும் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.  மாலையில், நாகர்கோவிலில் நடக்கும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

திருநாவுக்கரசரை வரவேற்று காங்கிரஸ் கட்சியினர் ஃப்ளெக்ஸ் போர்டு மற்றும் காங்கிரஸ் கொடிகளை மாவட்டம் முழுவதும் கட்டியுள்ளனர். நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பும், போலீஸ் பேரிகார்டுகளிலும் காங்கிரஸ் கொடிகளைக் கட்டியுள்ளனர். அரசு சொத்துக்களில் கட்டப்படுள்ள கொடிகளை அகற்றுமாறு நேசமணி நகர் போலீஸார் காங்கிரஸ் கட்சியினரிடம் கூறியுள்ளனர். ஆனால், கொடிகள் அகற்றப்படாததால், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் நகர முன்னாள் தலைவர் மாகின் மற்றும் கண்டால் தெரியும் இரண்டுபேர் என மொத்தம் நான்குபேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!