இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய ட்ரையம்ப் டைகர் 1200 Xcx | triumph tiger 1200 Xcx launched in India

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (11/05/2018)

கடைசி தொடர்பு:15:25 (11/05/2018)

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய ட்ரையம்ப் டைகர் 1200 Xcx

டிரையம்ப் பைக்குகளின் வரிசையிலேயே மிகவும் சக்திவாய்ந்த, உயர் தொழில்நுட்பங்களை கொண்டது டைகர் 1200...

இத்தாலியில் நடைபெற்ற  EICMA 2017 கண்காட்சியில், முதல் முறை காட்சிப்படுத்தப்பட்ட புதிய டைகர் 1200 எனும் அட்வென்ச்சர் பைக்கை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டது ட்ரையம்ப். இந்த பைக்கிற்கு ரூ.17 லட்சம் என்று எக்ஸ்ஷோரூம் விலை வைத்துள்ளார்கள். 

டிரையம்ப் டைகர் 1200

மற்ற நாடுகளில், 6 வேரியன்டுகளில் வரும் இந்த பைக், இந்தியாவில் 1200  XCx என்று ஒரே வேரியன்டில் மட்டுமே கிடைக்கிறது. முந்தைய டைகர் 1200-ன் ஸ்டைல் அப்படியே உள்ளது போல தெரிந்தாலும், ஃபேரிங் டிசைன், டேங்க் மீதுள்ள மெட்டல் லோகோ எனச் சில சிறிய மாற்றங்கள் உள்ளன. முந்தைய பைக்கையும் புதிய பைக்கையும் வித்தியாசப்படுத்திக் காட்டுவது இதன் எல்ஈடி ஹெட்லைட் மற்றும்  DRL. அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல். இப்போது, 5 இன்ச்  TFT ஸ்கிரீன் கொண்ட முழு டிஜிட்டல் கன்சோலாக மாறிவிட்டது. அதுமட்டுமல்ல, டைகர் 800 பைக்கில் வருவதுபோல  backlit switchgear, அடப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், அடப்டிவ் கார்னரிங் லைட்டுகள்,  keyless ignition, பட்டனைத் தட்டி அட்ஜஸ்ட் செய்யக்கூடிய எலெக்ட்ரானிக் வின்ட்ஸ்கிரீன், ஹீட்டட் க்ரிப் மற்றும் சீட்டுகள் போன்ற வசதிகள் வருகின்றன. 

டிரையம்ப் டைகர் 1200

இன்ஜினைப் பொறுத்தவரை அதே 1,215 cc, மூன்று சிலிண்டர் இன்ஜின்தான். ஆனால், இப்போது 2 bhp அதிக பவர் தருகிறது. இதன் இன்ஜின் 141 bhp பவரையும் 122 Nm டார்க்கையும் உருவாக்கக்கூடியது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியோடு ,ஷாஃப்ட் டிரைவ் மூலம் பவரை வீலுக்கு அனுப்புகிறது. இந்த பைக்கின் எடை 248 கிலோ. முன்பைவிட 5 kg எடையைக் குறைத்துள்ளது. அட்வென்சர் பைக்குக்குத் தேவையான டிராக்‌ஷன் கன்ட்ரோல்,  cornering ABS மற்றும் ட்ரையம்பின்  Off-Road Pro, Road, Rain, Off-Road மற்றும்  Sport என 5 ரைடிங் மோடுகள்  வருகின்றன. சீட்டின் உயரம் 855 mm என்றாலும் 20 mm குறைத்துக்கொள்ளலாம்.

டிரையம்ப் டைகர் 1200

சீட்டிங் பொசிஷனை இன்னும் மேல்நோக்கியிருக்கும் விதமாக புதிய பைக்கின் ஹோண்டல் பார்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் வேலைகளை ட்ரையம்பின்  Semi Active Suspension (TSAS) செய்கிறது. இதில்  190 mm நகரக்கூடிய 48 mm தடிமனான  USD ஃபோர்க்கும், பின்பக்கம் 193 mm நகரக்கூடிய  WP மோனோஷாக் சஸ்பென்ஷனும் உள்ளன. இந்த பைக்கில், முன்பக்கம் 17 இன்ச் மற்றும் பின்பக்கம் 19 இன்ச், 32 ஸ்போக் அலுமினியம் வீல்கள் உள்ளன. பைக்கை நிறுத்துவதற்காக முன்பக்கம் 305 mm radial-mounted twin டிஸ்க் பிரேக்கும்   Brembo ; பின்பக்கம் 282 mm single டிஸ்க் பிரேக்கும் உள்ளது. முன்பக்க பிரேக் பிரெம்போவின் 4- piston monobloc calliper கொண்டது. பின்பக்கம் நிஸின் நிறுவனத்தின் 2- piston calliper உள்ளது. 

புதிய ட்ரையம்ப் டைகர் 1200  XCx பைக், பிஎம்டபிள்யூவின்  R1200GS Adventure மற்றும்  Ducati Multistrada 1200 Enduro பைக்குகளுடன் போட்டிபோடுகிறது.