`நான் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போது...’ சி.பி.எஸ்.இ அதிகாரிமீது நீட் எழுதிய மாணவி புகார்!

சி.பி.எஸ்.இ அதிகாரிமீது மாணவி பாலியல் புகார்

`நான் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போது...’ சி.பி.எஸ்.இ அதிகாரிமீது நீட் எழுதிய மாணவி புகார்!

கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் கொப்பம் என்ற இடத்தில் உள்ள லயன்ஸ் பள்ளியில் நீட் தேர்வு எழுத மாணவிகள் சென்றனர். உள்ளாடையில் ஹூக்குகள் இருந்ததால், அவற்றைக் கழற்றி வைத்துவிட்டுத் தேர்வு எழுத மாணவிகள் நிர்பந்திக்கப்பட்டனர். இந்நிலையில், மாணவி ஒருவர் சி.பி.எஸ்.இ அதிகாரிமீது பாலக்காடு வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரில், ''நான் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும்போது, அருகில் வந்த ஆண் அதிகாரி ஒருவர் அடிக்கடி என்னை உற்றுநோக்கிக்கொண்டிருந்தார். நான் கேள்வித்தாளை கையில் வைத்து மறைத்துக்கொண்டு பரீட்சை எழுதினேன். அந்தத் தருணத்தில் அவர் என்னை அவமானப்படுத்தியது போன்று உணர்ந்தேன்'' என்று தெரிவித்துள்ளார். 

நீட்

Representative Image

இதையடுத்து, இந்திய தண்டனை சட்டம் 509-ன் கீழ் (அவமானப்படுத்துவது, கெட்ட சைகைகள் செய்வது) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட மாணவி, இந்திய தண்டனைச் சட்டம்  354 பிரிவின்கீழ் (பாலியல் துன்புறுத்தல்) வழக்கு பதிவு செய்ய போலீஸாரை கேட்டுக்கொண்டுள்ளார். போலீஸார் விசாரணையில் இறங்கியபோது, கொப்பத்தில் மாணவி தேர்வு எழுதிய பள்ளியில் அனைத்து தேர்வறைகளிலும் கண்காணிப்பாளர்களாகப் பெண்கள் மட்டுமே பணியாற்றியுள்ளனர். தேர்வு மையத்துக்கு வெளியேயிருந்து வந்து ஆய்வு செய்த சி.பி.எஸ்.இ மேலதிகாரி ஒருவர் மாணவியிடம் இப்படி நடந்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது.  

இந்த மாணவியுடன் சேர்த்து 25 மாணவிகள் உள்ளாடைகளை அகற்றிய பின்னரே நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். நீட் விதிமுறையின்படி உலோகம் உடன் இருப்பது தவறாம். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!