ரஜினியைப் பற்றி பேசாமல் உங்கள் துறையைக் கவனியுங்கள்..! ஜெயக்குமாருக்கு அர்ஜுன் சம்பத் அறிவுரை

அமைச்சர் ஜெயக்குமார் அவரது துறையில் பணிகளைக் கவனிக்காமல் நடிகர்கள் கமல் மற்றும் ரஜினியைத் தரம் தாழ்ந்து விமர்சித்துப் பேசி வருவது கண்டிக்கதக்கது இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் அவரது துறையில் பணிகளைக் கவனிக்காமல் நடிகர்கள் கமல் மற்றும் ரஜினியை தரம் தாழ்ந்து விமர்சித்துப் பேசி வருவது கண்டிக்கத்தக்கது என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். 

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கும்பகோணம் வந்த இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், `மணல் கடத்தலைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கடத்தல் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட காவலர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

தனது துறையின் பணிகளைக் கவனிக்காமல் கமல்ஹாசன் மற்றும் குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் தரம் தாழ்ந்து விமர்சித்துப் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும். 

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் பிரதமராவேன் என்று ராகுல் காந்தி கூறி வந்தாலும் அவரை மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மத்தியில் மீண்டும் பா.ஜ.கதான் ஆட்சியைப் பிடிக்கும். சுதேசி பொருளாதாரத்தை ஆதரிக்கும் வகையில் வரும் 29-ம் தேதி கும்பகோணத்தில் இந்து வணிகர்கள் மாநாடு நடைபெற உள்ளது' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!