வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (11/05/2018)

கடைசி தொடர்பு:22:00 (11/05/2018)

வங்கி வழியில் சாமானியர்களுக்கு அவசரக்கடன்!

வங்கி வழியில் சாமானியர்களுக்கு அவசரக்கடன் வழங்கி வருகிறது ஓபன் டேப் நிறுவனம்

வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருக்கிறது வாங்கும் ஊதியம். எந்த சேமிப்பும் இல்லை என்கிற நிலையில் இருக்கும் அடித்தட்டு நபர்களான சாமானியர்களுக்கு அதிகமாக யாரும்  அவசரக்கடன் கொடுப்பதில்லை. வங்கிச்சேவை மூலமாகவும் கடன் கிடைப்பதில்லை.

அவசரக்கடன்

இவர்களுக்கு அவசரத் தேவைக்கு கடன்  கொடுக்கும்பட்சத்தில்  கந்து வட்டி மற்றும் அதிக வட்டிக்கு அவசரக்கடன் வாங்கி அவதிப்படுவதை  தவிர்க்க முடியும்.  

சாமானியர்களுக்கு, ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்ற நிதி சேவை நிறுவனமான ஓபன் டேப் ( Open Tap) கடன் வழங்கி வருகிறது. இதனை தொடங்கியவர் செந்தில் நடராஜன். இவர், அமெரிக்க பங்குச் சந்தையில் 17 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். 'இந்த நிறுவனம், 2015 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இது தொடர்பாக செந்தில் நடராஜன் கூறும் போது, ”நம் நாட்டில் 10% மட்டுமே கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, வங்கி கடன், அவசரக்கடன் உள்ளிட்ட இதர சலுகைகள் கிடைக்கின்றன. சாமானியர்களுக்கு அவசரக்கடன் கிடைப்பதில்லை. இவர்கள் தங்களின் நிதி தேவைக்கு, அங்கரீக்கப்படாத  நபர்களை நாடுகின்றனர். இந்த மக்களை முறைப்படுத்தப்பட்ட வங்கி சேவைக்குள் கொண்டு வர  தொடங்கப்பட்டது. குறிப்பாக, ரூ.25,000 க்கும் குறைவாக  ஊதியம் பெறும் அனைவருக்கும் அவசரக்கடன் வழங்குவதை முக்கிய இலக்காக கொண்டுள்ளோம். குறிப்பாக வங்கி கணக்கு மூலம் ஊதியம் பெறும் அனைவருக்கும் அவசரக்கடன் அளிக்கிறோம். 

இந்த ஆண்டு சுமார் ரூ.100 கோடி அவசரக்கடன் சாமானியர்களுக்கு வழங்க இலக்கு நிர்ணயத்துள்ளோம். அதாவது,சுமார் மாதத்திற்கு ரூ.10 லட்சம் அவசரக்கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதை இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் எட்டி விடுவோம். இன்னும் 3 மாதங்களில் நிறுவனம் முற்றிலும் டிஜிட்டல் மயமாக மாற உள்ளது ( Paper less). 

அவசரக்கடன் பெறும் சாமானியர்களுக்கு  ஆதார் இருப்பது அவசியம்.  அதிகபட்சமாக, கடன் பெற விரும்பும் சாமானியர்களுக்கு  இரண்டு மாத சம்பளம் கடனாக அளிக்கப்படுகிறது.  ஆண்டுக்கு 21-22% வட்டி. தற்போது சென்னை, சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு, நாசிக், புனே கிய நகரங்களில் அலுவலங்கள் உள்ளன. இதை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளோம்" என்றார்.