வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (12/05/2018)

கடைசி தொடர்பு:00:30 (12/05/2018)

'செம போத ஆகாதே' படத்தின் டிரெய்லர் வெளியானது!

அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் 'செம போத ஆகாதே' படத்தின் டிரெய்லர் வெளியானது.

'பாணா காத்தாடி' படத்துக்குப் பிறகு, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் படம்  `செம போத ஆகாதே'. இந்தப் படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

செம போத ஆகாதே

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளிவராமலே இருந்தது. இந்நிலையில், இந்தப் படம் வரும் மே 18 -ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை அதர்வா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் முதல் டிரெய்லர் ஏற்கெனவே வெளியான நிலையில், இன்று படத்தின் இரண்டாவது டிரெய்லரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. மனோபாலா, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,  `பூமராங்',  `இமைக்கா நொடிகள்',  `ஒத்தைக்கு ஒத்த' ஆகிய படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கிறது.  

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க