சுருளி அருவிக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்! | Tourists invading Suruli Falls

வெளியிடப்பட்ட நேரம்: 05:15 (12/05/2018)

கடைசி தொடர்பு:05:15 (12/05/2018)

சுருளி அருவிக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்!

சுருளி அருவிக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது சுருளி அருவி. இயற்கை எழில் சூழ, சுருளி வேலப்பர் வீற்றிருக்கும் சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

சுருளி அருவி

பள்ளி விடுமுறை நாள் என்பதால் தேனி மாவட்ட சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில், கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. சுருளி அருவி மேகமலை வனக்காப்பகத்திற்குள் உள்ள பகுதி. இதனால் இப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அருவிக்கு குளிக்கச் செல்ல, வனத்துறையின் சோதனைச் சாவடியில் கட்டணம் செலுத்தி தான் செல்ல முடியும். கம்பத்தில் இருந்து பேருந்துவசதி உள்ளது. சோதனைச் சாவடியில் இருந்து அருவிக்குச் சிறிது தூரம் காட்டு வழியே நடந்து செல்ல வேண்டும். இருபுறமும் மரங்களும், அதில் அமர்ந்திருக்கும் பறவைகளும் என அருவிக்குச் செல்லும் பாதையில் சுருளி மலையின் அழகு நம்மை வியப்படையச் செய்யும். பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை, சோப்பு, சாம்பு பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. குளித்து முடித்த பின்னர், ஆடைகளை அருவியிலேயே விட்டுச் செல்வதை தவிர்க்குமாறு வனத்துறை அறிவுறுத்துகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால், சுருளி அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.