தேனியில் கனமழை... பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

அக்னி நட்சத்திரத்தில் கோடைமழை பெய்வது இதம் அளித்தாலும், தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பெய்யும் கனமழையால் சேதாரங்களே அதிக அளவு ஏற்படுகின்றன.

கனமழை

தேனி மாவட்டத்தில் நேற்று(11-05-18) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 2 மணி நேரத்திற்கு மேலாகக் கனமழை பெய்தது. அக்னி நட்சத்திரத்தில் கோடைமழை பெய்வது இதம் அளித்தாலும், தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பெய்யும் கனமழையால் சேதாரங்களும் அதிக அளவு ஏற்படுகின்றன.


கனமழை
 

நேற்று பெய்த கன மழையால் திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருந்த மரங்கள் சாய்ந்தன. பின்னர் சின்னமனூர் காவல்துறையினர் விரைந்து சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மரங்களுடன் சேர்த்து மின்கம்பங்களும் சாய்ந்ததால் தேனியைச்  சுற்றியுள்ள சீலையம்பட்டி, மேல பூலாநந்நபுரம், கீழ பூலாநந்நபுரம் ஆகிய ஊர்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. செல்போன் இணைப்பும் சரிவர இயங்கவில்லை.

இதேப்போன்று  இருதினங்களுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் விருதுநகரைச் சுற்றியுள்ள ஒரு சில கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏனைய பிற மாவட்டங்களிலும் கனமழை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகவே உள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!