கடித்துக் குதறிய வெறி நாய்; கண்டு கொள்ளாத பேரூராட்சி அதிகாரிகள்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நேற்று அதிகாலையில் இருந்து ஒரு வெறி நாய் விரட்டி விரட்டிக் கடித்ததில் 30 பேர் காயமடைந்தனர். ஒரே நாளில் பொதுமக்களை அலறவிட்ட வெறி நாயால் பொதுமக்கள் மிரண்டு போய் இருக்கிறார்கள்.

கடித்துக் குதறிய வெறி நாய்

மானாமதுரையில் பல்வேறு பகுதிகளில் வெறிநாய் ரத்தக்களறியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று அதிகாலை தண்ணீர் எடுக்கப் போன பெண்ணை நாய் கடித்ததும் குடத்தால் அடித்திருக்கிறார். இதனால் கோபம் தலைக்கு ஏறியதால் அந்த நாய் விடாமல் மூன்று நான்கு இடங்களில் கடித்து குதறி விட்டது. அடுத்ததாக ஜெயராமன் என்பவர் காலையில் தூங்கி எழுந்து பால்பாக்கெட் வாங்கக்  கடைக்கு போகும் போது பின்னால் வந்து நாய் கடித்து குதறியது. அந்த வழியாக நடந்து வந்தவரையும் நாய் விட்டு வைக்கவில்லை. இப்படியாக முப்பது பேர் ரத்தத்தைக்  குடித்திருக்கிறது அந்த வெறி நாய்.

இப்படியாக வெறிநாய் கடித்தவர்கள் மானாமதுரை அரசு மருத்துவமனைக்குச்  சிகிச்சைக்கு சென்றனர். அங்கு போதுமான மருந்துகள் இல்லாததால் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவருகின்றனர். வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிர்காக்கும் மருந்துகள் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் இருப்பு இருப்பதாக அதிகாரிகள் சொன்னது பொய் என்பது நிதர்சனமாகியிருக்கிறது. நாங்கள் இந்த வெறி நாயைப் பிடிக்க சொல்லிப் பல முறை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தும் அவர்கள் அலட்சியமாகவே நடந்து கொண்டதன் விளைவு இத்தனை பேர் வெறிநாய் கடித்து குதறக் காரணமாக அமைந்திருக்கிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!