பாடலாசிரியராக அறிமுகமான பிரபல நடிகர் - அறிமுகம் செய்தார் அனிருத்

நடிகராக ஆரம்பித்து பின் கதாநாயகன், பின்னணி பாடகன், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட சிவகார்த்திகேயன் தற்போது பாடலாசிரியராகவும் உருவெடுக்கிறார்.

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள `கோலமாவு கோகிலா' படத்தின் இரண்டாவது பாடல் வரும் மே 17- ம் தேதி வெளியாகவிருக்கிறது.

சிவகார்த்திகேயன்

`கல்யாண வயசு' எனத் தொடங்கும் இப்பாடலை, அறிமுகப் பாடலாசிரியர் ஒருவர் எழுதியிருக்கிறார் என ட்வீட் தட்டியிருந்தார், இசையமைப்பாளர் அனிருத். இப்பாடலை எழுதியிருப்பது யார்? என ஆவலாகக் காத்துக்கொண்டிருந்தனர், ரசிகர்கள். இப்படத்தில் அனிருத் இசைமைத்து ஏற்கெனவே வெளியாகியுள்ள ஒரு பாடலில் கௌதம் மேனன் பின்னணி குரல் கொடுத்திருந்தார். அதுபோல ஒரு நட்சத்திரம் பாடல் எழுதியிருக்கும் எனப் பலரும் யூகித்த நிலையில், சிவகார்த்திகேயன், அனிருத் உட்கார்ந்து பாடல் வரிகளை டிஸ்கஸ் செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டிருக்கிறார் அனிருத். தனது அடுத்த படத்தில் நயன்தாராவுடன் இரண்டாம் முறையாக இணையும் சிவா, அவருக்காக ஒரு பாடலை எழுதியிருப்பது ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நடிகர், பாடகர், தயாரிப்பாளர் இப்போ பாடலாசிரியர் வேறு (கலக்குறீங்க சிவா...)

`கோலமாவு கோகிலா' படத்தில் `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜாக்குலின் நயன்தாராவுக்குத் தங்கையாக நடித்துள்ளார். மேலும், சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!