பிக்பாஸ் 2... சில மணி நேரங்களில் டீசர்! - வெளியிடுகிறார் கமல்ஹாசன்

`பிக்பாஸ்’. கடந்தாண்டு தமிழ்த் தொலைக்காட்சி உலகில் அதிகம் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி. ஷோ தொடங்குவதற்க்கு முன் ஆங்கர் யார், பங்கேற்பவர்கள் யார் என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. யாரும் எதிர்பாராத ஆங்கராக நடிகர் கமல்ஹாசன் களமிறங்கினார்.

`பங்கேற்பவர்கள்’ என  சமூக வலைதளங்கள் பல பட்டியல்களை வெளியிட்டன, கடைசியில் விஜய் டிவி அதிகாரபூர்வ லிஸ்டை வெளியிட்டது. ஓவியா, வையாபுரி உள்ளிட்ட சினிமாவில் வாய்ப்பில்லாதவர்களே அதிகம் இடம்பிடித்திருந்தனர். ஆனாலும் ஷோ பிக் அப் ஆகி, `ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, `ஓவியா ஆர்மி’, `ட்ரிகர் பண்றாங்க’, `நீங்க ஷட் அப் பண்ணுங்க’, `முட்டை எப்படிடா காணாமப் போச்சு’ போன்ற வார்த்தைகள் வைரலாகின.  ஹிட் ஆன ஷோ என்றால் வெர்ஷன் 2 வேண்டாமா? இதோ `பிக்பாஸ் 2’ தயாராகி விட்டது.

kamal

ஜூன் இரண்டாவது வாரத்தில் ஷோ தொடங்கப்படவிருக்கிற நிலையில் அதற்கான டீசர் இன்று வெளியிடப்படவுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் கமல்ஹாசனே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவிருக்கிறார். இரண்டாவது சீசனுக்கும் தொகுப்பாளர் கமல்ஹாசனே. போட்டியாளர்களும் தேர்வாகி விட்டதாகவே தெரிகிறது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!