Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மன்னார்குடி வங்கிக் கொள்ளை : நெல்லையில் பதுங்கிய குற்றவாளிகள் ?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் இப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. குற்றவாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இதில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் திருநெல்வேலியில் பதுங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கி கொள்ளை

மன்னார்குடி அருகே உள்ள அஷேசத்திரத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த 7-ம் தேதி துப்பாக்கியுடன் இங்கு புகுந்த கொள்ளைக் கும்பல், ஊழியர்களை மிரட்டி 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துச் சென்றது. கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க திருச்சி மண்டல் ஐ.ஜி. வரதராஜன் உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வங்கி அமைந்துள்ள பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராப் பதிவுகளைக் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். கொள்ளைச் சம்பவத்தின் போது கொள்ளையர்களை நேரில் பார்த்த வங்கி ஊழியர்களின் உதவியோடு, லேட்டஸ்ட் சாஃப்ட்வேர் மூலம் கணினியில் குற்றவாளிகளின் உருவங்களை வரைவதற்கான முயற்சியும் நடைபெற்றது. இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்கள் 5 பேர் திருநெல்வேலியில் தங்கியிருப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால், தனிப்படை போலீஸார் திருநெல்வேலி சென்றுள்ளார்கள். சந்தேகத்திற்குரிய அந்த 5 பேரும் மன்னார்குடி அழைத்து வரப்படுவார்கள் எனக் காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.   

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement