`நான் தோற்றுவிட்டேன்' - தற்கொலைக்கு முயன்ற சென்னை இன்ஜினீயரின் 4 பக்கக் கடிதம் 

தற்கொலை கடிதம்

ஒரு மகனாக நான் தோற்றுவிட்டேன் என்று தற்கொலைக்கு முயன்ற சென்னை இன்ஜினீயர் 4 பக்கம் கடிதம் எழுதிவைத்துள்ளார். 

 சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சபரிநாதன். சென்னைப் பூந்தமல்லி குமணன் சாவடியில் தங்கியிருந்தார் வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி காம்ப்ளக்ஸின் நான்காவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரை தேவசகாயம் என்பவர் காப்பாற்றினார். படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுதொடர்பாக வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு விசாரணை நடத்திவருகிறார். 

 தற்கொலைக்கு முன்  சபரிநாதன் நான்கு பக்க கடிதம் எழுதியுள்ளார்.  அதில் ``எனக்கு என் அப்பா எல்லாம் செய்தார். ஆனால், இவர் பையனாக நான் எதுவும் செய்யவில்லை. அவருக்கு ஒரு மகனாகத் தோற்றுவிட்டேன். ஆனால், குறைந்தபட்சம் ஒரு மனிதனாவது ஏதாவது செய்ய ஆசைபடுகிறேன். நான் திசை மாற விரும்பவில்லை. நான் இறந்து சிலர் கவனத்தை என் மீது திருப்புவேன். இனி என் நண்பர்கள் கேட்பதிலும் மற்றவர்களை கேட்கச் சொல்வதிலும்தான் மாற்றம் இருக்கிறது. மாற்றத்திற்காக என்னால் முடிந்த முழு முயற்சியை எடுத்துவிட்டேன். 

எனக்குத் தெரியும் நான் ஒருவன் கேட்டால் எதுவும் மாறாது. ஆனால் அனைவரும் கேட்டால் அனைத்தும் மாறும். தயவு செய்து நல்ல மாற்றத்திற்காக அனைவரும் பேசுங்கள். பேசச் சொல்லுங்கள். இதற்காக நான் உயிர் தியாகம் செய்கிறேன். யாரும் நூறு சதவிகிதம் நல்லவர்கள் இல்லை. யார் எது சொன்னாலும் அதில் உள்ள உண்மை நியாயத்தை ஆராய்ந்து பேசுங்கள். எனக்கு ஆர்.ஐ.பி ஸ்டேட்ஸ் போடுவதாலோ அல்லது வருத்தப்படுவதாலோ எதுவும் மாறப் போறது இல்லை. நான் திரும்பப் போவதில்லை. ஆனால், நீங்கள் எல்லாரும் பேசுவதால் எல்லாம் மாறும்" என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து 12 கேள்விகளையும் அவர் கேட்டுள்ளார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!