`மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்!’ − பொம்மிநாயக்கன்பட்டியில் திருமாவளவன்

தேனி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் பட்டியலின சமூகத்தினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டு அது கலவரமாக மாறியது.

இந்நிலையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பொம்மிநாயக்கன்பட்டிக்கு நேரில் சென்று அம்மக்களிடம் பேசினார். பிரச்னை குறித்து கேட்டறிந்தார். பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ``பொம்மிநாயக்கன்பட்டி கலவரம் குறித்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். கலவரத்தில் கைதானவர்களை ஜாமீனில் எடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யவுள்ளோம். பொம்மிநாயக்கன்பட்டிக்கு நான் வருவதற்கு தாமதம் ஆனாலும் எனது கட்சி உறுப்பினர்கள் அனைத்து உதவியும் செய்துள்ளனர். 

திருமாவளவன்

குடிசைகள் எரிந்த காலத்தில் வராத சில அமைப்புகள் தற்போது இங்கு வர ஆர்வம் காட்டுகின்றனர். மத நல்லிணக்கத்தைச் சீர் குலைக்கும் நோக்கிலே செயல்படுகின்றனர்" என இந்து அமைப்புகளைச் சாடினார் திருமாவளவன். இன்று மாலை ஹெச்.ராஜா பொம்மி நாயக்கன்பட்டிக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இரு தரப்பினரும் சமாதானம் பேசி பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!