Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

`எந்தக் கட்சியோடும் ஆயுள்கால கூட்டணி கிடையாது!’ - திருநாவுக்கரசர் பளீச்

ந்தக் கட்சியோடும் ஆயுள்கால கூட்டணி கிடையாது எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அதிரடியாக தெரிவித்தார். 

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் திக்கணங்கோட்டில் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், ``ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானதும் மோடி அலை வீழ்ச்சியடைந்துவிட்டது. மோடி அலை ஓய்ந்துவிட்டது இப்போது ராகுல் அலை வீசுகிறது. ஊர் ஊராக பொய்யை வியாபாரம் செய்யும் மோடிக்கு ஓடோடிச்சென்று பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக ராகுலை தலைவர் ஆக்கியிருக்கிறார் சோனியாகாந்தி. மோடியின் சிம்ம சொப்பனமாக இருப்பவர் ராகுல் காந்தி. சந்திரபாபு நாயுடு, சங்திரசேகரராவ், மம்தா, லல்லு எனப் பலர் இருந்தாலும் அவர்கள் மாநில கட்சிகள்தாம். பா.ஜ.க.வை வீழ்த்தும் வல்லமை படைத்தது காங்கிரஸ்தான். மோடியை வீழ்த்தும் தேசியத் தலைவர் ராகுல்காந்திதான். மூன்றாவது அணி நான்காவது அணியெல்லாம் வெற்றிபெறப்போவதும் இல்லை, ஆட்சிக்கு வருவதும் இல்லை. பா.ஜ.க.வுக்கு மாற்று காங்கிரஸ் கட்சிக்கும், ராகுலும்தான். கர்நாடக தேர்தலில் நம்பிக்கையோடு இருக்கிறோம், அங்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். ராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் உறுதியாக வெற்றிபெறும் எனக் கருத்துக்கணிப்பு சொல்கிறது. நூறு நாளில் 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் போடுவதாக மோடி சொன்னார். எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாததால் மோடி மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கல்ந்தாய்வு கூட்டம்

ஏப்ரல் மே மாதத்தில் வரவேண்டிய தேர்தல் முன்கூட்டியே நவம்பர் டிசம்பரில் வரலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் கூட்டணி தேவைதான். எந்தக் கட்சியோடும் ஆயுள்கால கூட்டணி கிடையாது. எப்போதும் கூட்டணியில் குறைவாகத்தான் சீட் வாங்கணும் எனக் கிடையாது. கூட்டணி வந்தால் ஸ்டாலின் முதல்வர் என்றால் நாம் அவருக்குக் கோஷம் போடத்தான் செய்வோம். எப்போதும் அதையே சொல்வோம் எனவும் கிடையாது. நான் தமிழக முதல்வராக வரவேண்டும் என்பது இல்லை, காமராஜரின் தொண்டர் முதல்வராக வர வேண்டும். அது அடுத்த தேர்தல் அல்லது 10 வருடம் பிறகு வரலாம். நம் கட்சியை வலுப்படுத்தும் விதமாக 1100 உறுப்பினர் கொண்ட ஒரு பூத்துக்கு 25 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்க வேண்டும். ஆனால், ஒன்றரைக்கோடி உறுப்பினர்கள் வந்த பிறகுதான் கட்சிப் பெயரைச் சொல்வேன் என ரஜினி சொல்கிறார். அவர் ஒரு பூத்துக்கு 30 பேர் கொண்டுவரவேண்டும் என்கிறார். நாம் கட்சியில் ஒரு பூத்துக்கு 25 பேர் கொண்ட கமிட்டி அமைக்க முடியாதவர்கள் நீக்கப்படுவார்கள்" என்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கர்நாடகத்தில் பா.ஜ.க. வெற்றிபெற்றால்தான் தமிழக விவசாயிகளுக்கு நல்லது எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதை பார்த்தால் அவர் அ.தி.மு.க.வா அல்லது பா.ஜ.க.வா எனக் கேட்க தோன்றுகிறது. ஏற்கெனவே பா.ஜ.க.வைச் சேர்ந்த எடியூரப்பா 5 ஆண்டு முதல்வராக இருந்தபோது காவிரி பிரச்னையைத் தீர்த்தார்களா? தேர்தலுக்காக இதையெல்லாம் சொல்கிறார்கள். காவிரி பிரச்னையைப் பொறுத்தவரை நீதிமன்றத்தின் மாண்பு மதிக்கப்படவேண்டும். கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு மதிக்க வேண்டும்" என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement