`அன்புள்ள மகனுக்கு..!’ - சமச்சீர் பாடப்புத்தகத்தில் நா.முத்துக்குமாரின் வாழ்க்கை பாடம்

நா.முத்துக்குமார்

9ம் வகுப்புக்கான தமிழ் சமச்சீர் பாட புத்தகத்தில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் படிக்கும் 1, 6, 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் (04-05-2018) வெளியிட்டார்.

இந்தப் புதிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழக மாணவர்களின் ஆளுமைத் திறன், செயல்வழி கற்றல் முறை, படைப்பாற்றல் திறன்  உள்ளிட்டவை மேம்படும் என அரசுத்தரப்பில் தெரிவித்துள்ளனர். புதிய பாட திட்டத்தைத் தமிழக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அச்சிட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ளது 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பாடநூல்கள், வரும் வரும் 23ம் தேதி   www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. 

புதிய பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 9ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய உருக்கமான கடிதம் இடம்பெற்றுள்ளது. பால்யகாலம், குடும்பச் சூழல், வாழ்க்கை பாடம், அன்பு என அனைத்தையும் தன் மகனுக்காக அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார். மாணவர்களுக்கு வாழ்க்கை பற்றிய ஒரு புரிதலை நா.முத்துக்குமாரின் இந்தக் கடிதம் நிச்சயம் உருவாக்கும்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!