வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (12/05/2018)

கடைசி தொடர்பு:19:30 (12/05/2018)

மதுபாட்டிலில் நத்தை! - மிரண்டுபோன குடிமகன்கள்

அரியலூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் நத்தை ஓடு கிடந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சியடைந்தனர். விற்பனையாளரிடம் டூப்ளிக்கெட் சரக்கு ஓட்டுகிறீர்களா என அவர்கள் டாஸ்மாக் கடையில் பிரச்னையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுபாட்டிலில் நத்தை

 

அரியலூரில் மாவட்டம் கள்ளங்குறிச்சி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. மதியம் கடை திறந்த சிறிது நேரத்தில் அரியலூரைச் சேர்ந்த தொழிலாளியான அய்யப்பன் என்பவர் மதுபாட்டில் ஒன்றை வாங்கியிருக்கிறார். விற்பனையாளர் கொடுத்ததை அப்படியே பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நண்பர்களுடன் குடிக்க உக்கார்ந்திருக்கின்றனர். அப்போது அவர் வாங்கிய மது பாட்டிலின் மூடியைத் திறக்கும் போது நண்பர் ஒருவர் பாட்டிலில் ஏதோ மிதப்பதாகச் சொல்லியிருக்கிறார். உற்றுப் பார்த்த போது அந்த மதுபாட்டில் உள்ளே நத்தை ஒன்று செத்துக் கிடந்ததைக் கண்ட அய்யப்பன் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.              

மதுபாட்டிலில் நத்தை     

பின்னர், மூடியைத் திறக்காமல் அப்படியே டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் நத்தை செத்துக் கிடந்த சரக்குப் பாட்டிலைக் காண்பித்திருக்கிறார். அப்போது ஊழியர்கள் உற்பத்தி செய்கிற இடத்திலேயே நத்தை விழுந்திருக்கலாம் என மழுப்பலாகப் பேசியிருக்கிறார்கள். மது பாட்டில்கள் வாங்க வந்த குடிமக்கள், உற்பத்தி செய்கிற இடத்திலிருந்தே வந்ததா?, இல்லை நீங்கள் எதுவும் டூப்ளிக்கெட் சரக்கு ஓட்டுகிறீர்களா என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கடை ஊழியர்களுக்கும், மதுபாட்டில்கள் வாங்க வந்தவர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அய்யப்பன் அந்த மதுபாட்டிலுடன், அதனை வாங்கியதற்கான ரசீதை ஊழியர்களிடம் வாங்கி விட்டு வீட்டுக்ச் சென்றார். மதுபாட்டிலில் நத்தை செத்துக் கிடந்தது குடிமகன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.