டெல்லியில் தாக்கப்பட்ட காஷ்மீரி குடும்பத்தினர்! - வைரல் ஆன வீடியோவால் போலீஸ் விசாரணை

 காஷ்மீரி                

தலைநகர் டெல்லியில் நெடுங்காலமாக வசித்துவரும் காஷ்மீரி குடும்பத்தினர் மீது மதவாதக் கும்பல் தாக்குதல் நடத்தியது தொடர்பான காணொளி, இணையத்தில் பரவலானது. இதையடுத்து டெல்லி போலீஸ் புகார் பதிவு செய்துள்ளது. 

தெற்கு டெல்லி, மகாராணி பாக், சித்தார்த் விரிவாக்கப் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் அஸ்ரா முசாஃபர் எனும் விலங்கு நல ஆர்வலர் வசித்துவருகிறார். அவருடைய மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரரும் 17 ஆண்டுகளாக உடன் வசித்துவருகின்றனர். கடந்த வியாழன் இரவு 11 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.என். பாண்டே என்பவரின் தலைமையில் 30 பேர் கொண்ட கும்பல், உருட்டுக் கட்டைகளுடனும் தடிகளுடனும் சென்று நான்கு சகோதரிகளைக் கடுமையாகத் தாக்கியது. அவர்களின் சகோதரர் பிலால் உசைன் தடுக்கமுற்பட்டபோதும் வன்முறைக் கும்பல் அவர்களை விடாமல் தாக்கியது. 

``காஷ்மீரில் பண்டிட்டுகளை காஷ்மீரிகள் விரட்டிவிட்டதற்காக, நாங்கள் உங்களை விரட்டியடிக்கிறோம்” என்று கூறிக்கொண்டே அவர்கள் தாக்குதல் நடத்தியதாக, பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறியுள்ளனர். முன்னதாக, இதே கும்பல் முசாஃபரின் தந்தையையும் கொல்லமுயன்றதாகவும், அதையடுத்து அவரை குடும்பத்தினர் காஷ்மீருக்கு அனுப்பி வைத்ததாகவும் போலீஸில் அவர்கள் கூறியுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!