`ஓகி புயலுக்கு பிறகு கூலிகளாக மாறிய விவசாயிகள்!’ - நிவாரணம் கேட்டு தர்ணா போராட்டம்

ஓகி புயலில் பாதிப்படைந்த விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கேட்டு நாம் குமரி மக்கள் அமைப்பு சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது.

கி புயலில் பாதிப்படைந்த விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கேட்டு நாம் குமரி மக்கள் அமைப்பு சார்பில் நாகர்கோவிலில் தர்ணா போராட்டம் நடந்தது.

தர்ணா போராட்டம்

கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் அந்த அமைப்பின் நிறுவனர் ஜெகத்கஸ்பர் பேசுகையில், "ஓகி புயலில் இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயி மற்றும் மீனவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தைக் குளிர்விக்கும் விதமாக 20 லட்சம் மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைகளை உடைத்து கருங்கற்களைக் கேரளாவுக்கு கடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும். குமரி மாவட்டத்தில் வாழை விவசாயம் செய்தவர்களில் 80 சதவீதம் விவசாயிகள் ஓகி புயலுக்கு பிறகு, விவசாயக் கூலிகளாக மாறிவிட்டனர். ஓகி புயலில் மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் மத்திய மாநில அரசுகள் இழுத்தடிக்கின்றன. ஓகி புயல் பாதித்த விவசாயிகள், மீனவர்கள் மற்றும் மலைவாழ் மக்களுக்கு ஏற்பட்ட 6,000 கோடி ரூபாய் இழப்பை வழங்காமல் இருட்டடிப்பு செய்யும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. ஓகிபுயல் எளிதில் கடந்து செல்லும் நிகழ்வு அல்ல என்பதை மத்திய மாநில அரசுகள் உணந்துகொள்ள வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!