`திருமணத்துக்குப் பார்த்த பெண் பிடிக்கல’ - பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற பயிற்சி காவலர்

திருமணத்திற்குப் பார்த்த பெண் பிடிக்காததால், தஞ்சை ஆயுதப் படையில் இருந்த பயிற்சிக் காவலர் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தற்கொலைக்கு முயன்ற பயிற்சிக் காவலர்

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையைச் சேர்ந்தவர் நாகமாணிக்கம். இவர் கரூரில் டிராபிக் போலீஸ் எஸ்.எஸ்.ஐ.,யாகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் தினேஷ்குமார். பி.இ.,படித்துள்ளார். இவர் தஞ்சையில் உள்ள பழைய எஸ்.பி., அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆயதப்படையில் பயிற்சிக் காவலராக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். காவலர் பயிற்சி இம்மாதம் 30-ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்நிலையில்,இன்று மதியம் உணவு இடைவேளையின் போது பாத்ரூம் சென்று வருதாக நண்பர்களிடம் தெரிவித்து விட்டுச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் அவர் திரும்பவராத நிலையில், அங்கிருந்தவர்கள் சென்று பார்த்து போது, தினேஷ்குமார் பிளேடால் கழுத்திலும், வலது கையிலும் அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் உடனே தினேஷ்குமாரை மீட்டு, தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.பி.,செந்தில்குமார், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்குச் சென்று நடத்திய விசாரணையில், தினேஷ்குமாருக்கு அவரது பெற்றோர்கள் கடந்த 20 நாள்களுக்கு முன்பு திருமணத்திற்கு பெண் பார்த்துள்ளனர். தினேஷ்குமாருக்கு பெண்னை பிடிக்கவில்லை, இதை பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால், தினேஷ்குமாரின் கருத்தை ஏற்காத அவரது தந்தை நாகமாணிக்கம், பயிற்சி முடித்தவுடன் திருமணம் என சொல்லியதால், தற்கொலைக்கு முயன்றுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.பயிற்சிக் காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!