Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உயர் அதிகாரிகளுக்குத் தெரியாமல் ஆர்.டி.எப் என்ற தனிப்படை உருவாக்கிய எஸ்.பி. சஸ்பெண்ட்!

யர் அதிகாரிக்கு தெரியாமல்  ரூறல் டைகர் போர்ஸ் (ஆர்.டி.எப்) என்ற தனிப்படை வைத்திருந்த எர்ணாகுளம் எஸ்.பி. ஜார்ஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

எஸ்.பி. சஸ்பெண்ட்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் வராப்புழா பகுதியில் ஒரு வீடு மீது தாக்குதல் நடத்திய வழக்கில் இளைஞர் ஸ்ரீஜித் என்பவர் காவல்துறையினர் அழைத்துச்சென்றனர். அவர் போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் எர்ணாகுளம் எஸ்.பி. ஜார்ஜ் போலீஸ் அகாடமிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். லாக்கப் டெத் குறித்து ஐ.ஜி.தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணையில் எஸ்.பி. ஜார்ஜ் 22 பேர் அடங்கிய ஆர்.டி.எப். போலீஸ் படையை உயர் அதிகாரிகளுக்குத் தெரியாமல் உருவாக்கியிருந்தது தெரியவந்தது. அவர்களுக்குத் தனி சபாரி யூனிபாம் வழங்கியிருக்கிறார். இந்த போலீஸ் படைக்காக ரகசியமாக நிதியும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். ஆர்.டி.எப். போலீஸ் படையை சேர்ந்த மூன்றுபேர்தான் வழக்கில் சம்பந்தம் இல்லாத ஸ்ரீஜித்தை அழைத்துச்சென்று தாக்கியுள்ளனர். ஸ்ரீஜித் கைது செய்யப்படுவது குறித்து வராப்புழா காவல்நிலையத்துக்கு ஆர்.டி.எப். போலீசார் தகவல் கொடுக்கவில்லை. எஸ்.பி. ஜார்ஜ் கூறியதன்பேரிலே ஸ்ரீஜித்தை கைது செய்ததாக ஆர்.டி.எப். போலீஸார் விசாரணையில் கூறியுள்ளனர். இந்த விசாரணை அறிக்கையைக் கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெகரா முதல்வர் பினராயி விஜயனிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து எர்ணாகுளம் எஸ்.பி.யாக இருந்த ஜார்ஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஸ்ரீஜித் மரணம் குறித்த வழக்கில் மூன்று ஆர்.டி.எப். போலீஸ், வரப்புழா எஸ்.ஐ.தீபக், சுதீர், இன்ஸ்பெக்டர் கிறிஸ்பின் ஸாம்  ஆகியோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement