Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

"நான் தண்ணீர்விட்டு வளர்த்த மரம்" - படித்த அரசுப் பள்ளியில் இஸ்ரோ தலைவர் சிவன் நெகிழ்ச்சி!

நாகர்கோவிலில் தான் படித்த பள்ளியை பார்வையிட்ட இஸ்ரோ தலைவர் சிவன் பள்ளிபருவத்தில் தண்ணீர் விட்டு வளர்த்த சவுக்கு மரத்தை தொட்டுப் பார்த்து நெகிழ்ச்சியடைந்தார்.

ண்ணீர் விட்டு வளர்த்த சவுக்கு மரத்தை தொட்டுப்பார்த்து மகிழ்ச்சியடைந்த சிவன்

நாகர்கோவில் அருகே சரக்கல்விளை பகுதியில் உள்ள தனது குடும்ப கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக இஸ்ரோ தலைவர் சிவன் இன்று வந்திருந்தார். அப்போது அவர் படித்த அரசு தொடக்க பள்ளியைப் பார்வையிட்டார். அந்த பள்ளியை நவீனமயமாக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். அப்போது பள்ளி வளாகத்தில் நின்ற பெரிய சவுக்கு மரத்தை தொட்டுப் பார்த்தவர் 'பள்ளிப்பருவத்தில் நான் தண்ணீர்விட்டு வளர்த்த மரம்' என மகிழ்ச்சியுடன் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த வருடம் இஸ்ரோ அதிக அளவில் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக 5 டேட்டா ரேட் கொண்ட மிகப்பெரிய செயற்கை கோளான ஜி சாட் 29 விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜி சாட் 7 விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 10-க்கும் மேற்பட்ட செயற்கைக் கொள்கைகளை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. நிச்சயம் இந்த வருட முடிவிற்குள் குறைந்தது 8 செயற்கை கோள்களை விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த வருடத்தில் 13 செயற்கை கோள்களை தயார் செய்ய திட்டமிட்டுள்ளோம். செயற்கை கோள்களின் பயன்கள் பாமர மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இஸ்ரோவின் விருப்பம்.

குடும்ப கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக இன்று வந்திருந்த இஸ்ரோ தலைவர் சிவன்

குறிப்பாக, திசைகாட்டும் நேவிகேஷன் கருவிகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. அந்த பணிகள் முடிவடைந்ததும் தயாரிக்கப்பட்ட கருவிகள் மீனவர்களுக்கு வழங்கப்படும். அது மீனவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். அது போன்று விவசாயிகள் உட்பட அனைவருக்கும் பயன்படும் வகையில் புதிய கருவிகள் உருவாக்கப்படும். பிரதமர் மோடியின் ஆலோசனைப்படி 150-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, அவை அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. சந்திராயன் 2 செயற்கைக்கோள் உருவாக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. தொழில்நுட்ப சோதனை முடிந்த பின்னர், இந்த வருட இறுதியில் சந்திராயன் 2 செயற்கைகோள்  விண்ணில் செலுத்தப்படும். சூரியனை ஆராய `சன் மிஷன்’ செயற்கை கோள் மிக விரைவில் செலுத்தப்பட உள்ளது. மங்கள்யான் செயற்கை கோள் குறித்த திட்டமிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இஸ்ரோவின் ஜி சாட் 11, ஜி சாட் 20 போன்ற திட்டங்கள் மற்றும் பயன்கள்  கிராம மக்களை எளிதில் சென்றடையும் வகையில் உள்ளது" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement