Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை வரவேற்க வேண்டும்!’ - முதல்வர் பழனிசாமி கருத்து

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் 43வது மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி

பின்னர், அண்ணா பூங்காவில் உள்ள மலர் கண்காட்சியை பார்வையிட்டார். பிறகு கூட்ட அரங்கத்திற்கு அருகே உள்ள மலைவாழ் பழங்குடியின் மக்களில் கைவினை பொருட்கள், மலைப் பகுதிகளில் விளைந்த பழங்கள், காய்கறிகள், மலர்களைப் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.,கள். கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்ளுகிறார் என்பதற்காக 2 நாள்களுக்கு முன்பாகவே போக்குவரத்து மாற்றப்பட்டது. இன்று காலையில் இருந்து சேலம் முதல் ஏற்காடு வரை 10 மீட்டருக்கு ஒரு காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். ஏற்காடு செல்லும் வழியில் ஆங்காங்கே வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது. கலையரங்கத்தில் நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்து விட்டு வெளியே வந்த முதல்வர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசியது, ''வேளாண்மை தொழில் சிறக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகள் நலன் காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான விதைகள் வழங்கப்பட்டு பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையில் குறைவான அளவு  தண்ணீர் உள்ளது. அது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவ மழை நன்றாக இருக்கும். இதன் மூலம் அணைகள் நிரம்பும். காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்றம் இறுதி தீர்பு வழங்கும் நிலையில் உள்ளது. நிச்சயம் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

சேலம் மாவட்டத்தில் பசுமை வழிச்சாலை திட்டத்தின் மூலம் பல்வேறு தொழிற்சாலைகள் வரும். வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் கிடைக்கும். தொழில் வளம் பெருகும். மத்திய அரசின் இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை அனைவரும் வரவேற்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகள்  உருவாகும். இத்திட்டத்திற்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு உரிய இழபீட்டு தொகை கிடைக்கும். மணல் மற்றும் கனிம வளங்கள் திருட்டைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement