Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”சேலத்தின் வளத்தைக் கொள்ளை அடிக்க வந்துள்ளது பாரத் மாலா திட்டம்” -சீமான் விமர்சனம்!

சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  இன்று சேலத்தில் கொண்டு வரப்பட உள்ள விமான நிலைய விரிவாக்கம், சேலம் டூ சென்னை 8 வழி சாலை விரிவாக்கம் திட்டம் போன்றவற்றைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்க சேலம் வந்திருந்தார். அதையடுத்து சேலம் மூக்கனேரியை பார்வையிட்டு அதன் கரைப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டார்.

அதையடுத்து சீமானிடம் பேசியபோது, ''சேலத்தில் விமான நிலையம் விரிவாக்கம், சேலம் டூ சென்னை 8 வழி பசுமை சாலை என்பது மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள். இது சாகர் மாலாவை போன்று  பாரத் மாலா திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் சேலத்தில் உள்ள வளங்களைக் கொள்ளையடித்து விட்டுப் போகப்போகிறார்கள். இத்திட்டங்களை இங்குச் செயல்படுத்த வேண்டும் என்று  யார் கேட்டது.

மீத்தேன், ஈத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களால் வளங்களைக் கொள்ளை அடித்துச் செல்ல இருக்கிறார்கள். தண்ணீர் கேட்கிறோம் கொடுக்க முடியவில்லை. பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை அழித்து வான ஊர்தி, 8 வழிச் சாலை போடப்போகிறார்களாம். வான ஊர்தியில் மேலே போனால் போதுமா சாப்பாட்டிற்கு என்ன செய்வது.

மூடச் சொல்லுவதை மூடுவதில்லை. 4 வழி சாலை போட்டு என்ன வளர்ச்சி அடைந்திருக்கிறது. அங்கங்கே சுங்க வரி கட்டியது தான் மிச்சம். இதையெல்லாம் பேசினால் எங்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும், தேச துரோகிகளை போலவும் காட்டுவார்கள். வான ஊர்தியில் போனால் மட்டும் போதுமா? சாப்பாட்டிற்கு என்ன செய்வது. பொறுப்பற்ற அரசு. ஒரு அரசு செய்யக் கூடிய வேலையை ஒரு தனி மனிதர் செய்திருக்கிறார். நம்மிடம் இருக்கும் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்காமல் கர்நாடகாவிடம் 4 டி.எம்.சி., தண்ணீருக்காகக் கையேந்துகிறோம்'' என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement