Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; ஈரோட்டில் பரபரப்பு!

பெட்ரோல்

Erode: 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் வழக்கறிஞர் ஒருவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா ரங்கசமுத்திரம் திருநகர் காலனியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜாமணி. நேற்று இரவு 11.30 மணியளவில் ராஜாமணி தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், வீட்டின் கண்ணாடி வெடித்து உடைந்த சத்தம் கேட்டிருக்கிறது. இதனையடுத்து வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது, ஒரு பீர்பாட்டிலில் பெட்ரோலை நிரப்பிப் பற்றவைத்து மர்மநபர்கள் யாரோ வீட்டின் மீது வீசியிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. பெட்ரோல் குண்டு வெடித்ததில் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்தன. 

குண்டு

இதனையடுத்து, ராஜாமணி போலீஸாருக்கு தகவல் கொடுக்க, போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வழக்கறிஞர் ராஜாமணியின் இளைய மகனான அசோக் சுற்றுலா சென்றுவர வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்துவந்ததும், தொழில் போட்டி காரணமாக அவரது எதிரிகள் பழிவாங்க வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியவந்திருக்கிறது.

அதனைத்தொடர்ந்து, பெட்ரோல் குண்டு வீசிய டெனிஸ் ஜாக்சன், தினேஷ், ஹரிஹரன் ஆகிய மூன்று கல்லூரி மாணவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் என்பவரின் வீட்டருகே தான் இச்சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement