"என் 'பட்டு' பாத்திமாவுக்கு நன்றி" -மனைவிக்கு ரொமான்டிக்காக நன்றி சொன்ன விஜய் ஆண்டனி!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் 'காளி' படத்துக்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

'வணக்கம் சென்னை' படத்திற்குப் பிறகு, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'காளி'. இந்தப் படத்துக்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது.

காளி பட விழாவில் விஜய் ஆண்டனி

இதில் பேசிய விஜய் ஆண்டனி, "இந்தப் படத்துக்கு முழு காரணம் கிருத்திகா தான். இவங்களை மாதிரி பல திறமையான பெண்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள் . ஆண்கள் அவங்களுக்கான முன்னுரிமையை கொடுத்தால் பல கிருத்திகாவை பார்க்கலாம். காலேஜ்ல என் ஜூனியர் கிருத்திகா. அப்போ எப்படி இருந்தாங்களோ அப்படியேதான் இப்போவும் இருக்காங்க. அவங்க ரொம்ப அழகா கதை சொல்லுங்க. இதுக்கு முன்னாடி எங்கிட்ட சொன்ன கதை கூட எனக்கு பிடிச்சிருந்தது.  ஆனா அது எனக்கு செட்டாகாதுன்னு நான் பண்ணலை. மத்த ஹீரோக்கள்கிட்ட இந்தக் கதையை கேட்டு பண்ணுங்க" என்றவர் அவருடன் இந்தப் படத்தில் நடித்த கதாநாயகிகளை பற்றி பேசினார். அப்போது, நான் ரொம்ப ரொமான்ஸ் பண்ண ஹீரோயின் நீங்கதான் என்று அம்ரிதாவை பார்த்து சொன்னார். ஒவ்வொருத்தருக்கும் நன்றி சொல்லி வந்த விஜய் ஆண்டனி, தன் அடுத்தப் படத்தோட டைட்டில் 'கொலைகாரன்' என்ற தகவலையும் அறிவித்தார். "என் மனைவியைப் பொறுத்தவரை, என்னையும் சேர்த்து மூணு குழந்தைகள். நான் எத்தனை முறை ஷூட்டிங் ஸ்பாட்ல தண்ணி குடிச்சேன்னு முதற்கொண்டு கேட்டு தெரிஞ்சுப்பாங்க. மியூசிக் டைரக்டரா இருந்த என்னை இந்தளவுக்கு தன்னம்பிக்கையோடு இருக்கேன்னா அதுக்கு அவங்க எனக்குக் கொடுத்த முக்கியத்துவம், அவங்க என் மேல வெச்சிருக்கிற லவ் இது இரண்டும்தான் காரணம். என் 'பட்டு' பாத்திமாவுக்கு நன்றி" என்று ரொமான்டிக்காக முடித்தார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!