வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (13/05/2018)

கடைசி தொடர்பு:11:02 (13/05/2018)

அன்னையர் தினம் - பிரபலங்கள் வாழ்த்து

தாய்க்கெல்லாம் தாயாகத் திகழ்ந்த அன்னா ஜார்விஸ் என்பர் கொண்டுவந்த அன்னையர் தினம் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. 

பழங்காலத்தில், வசந்த காலத்தை வரவேற்கும் விதமாகக் கிரேக்கர்கள் பல விழாக்களைக் கொண்டாடி வந்தனர். அதன் ஒரு சிறப்பாக பெண் தெய்வங்களை போற்றும் வகையில் அதற்கென தனி விழா எடுத்துக் கொண்டாடி வந்தனர். அப்போது உருவாகியது தான் அன்னையர் தினம். ஆனால் நாம் தற்போது கொண்டாடி வரும் தினம் கடந்த 19 நூற்றாண்டில் வாழ்ந்த  தாய்க்கெல்லாம் தாயாக விளங்கிய அன்னா ஜார்விஸ் என்பவர் கொண்டு வந்தது. இவர்  தாய்களை பாதுகாப்பதில் சிறந்து விளங்கினார். சமூக நலனில் மிகவும் அக்கறை உடையவராக இருந்தார். பிள்ளைகள் தங்களது தாயின் பெருமை உணரும் வகையில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என எண்ணிப் பல இடங்களில் அன்னையர் தினம் செயல்படுத்துவதுக்காக ஆதரவு திரட்டினர். இதை ஏற்ற அமெரிக்க அரசு ஆண்டு தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக அறிவித்தது. அதிலிருந்து தற்போது வரை அதே நாளை நாம் அன்னையர் தினமாக கொண்டாடி வருகிறோம். 

தாயின் பெருமை போற்றும் அன்னையர் தினத்துக்கு பல பிரபலங்கள் தங்களின் அன்னை புகைப்படத்தை பதிவிட்டு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

ஓ. பன்னீர் செல்வம் 

அன்னையர் தினத்துக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “ தன்னலம் பாராது மற்றவர்களுக்காகவே வாழ்பவள் தாய். இத்தூய தாயுள்ளதிற்கு உலகில் ஈடு இணை ஏதுமில்லை. இதனாலேயே மாதா,பிதா,குரு,தெய்வம் என தாயை முதலிடத்தில் வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். இப்படி தன்னை மெழுகாக்கி, பிறருக்காக வாழும் தியாகியர் அன்னையரை எந்நாளும் போற்றுவோம்!.” எனத் பதிவிட்டுள்ளார். 

கிரண் பேடி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “  இன்று அன்னையர் தினம். கடவுளே உன்னை மிகவும் வேண்டிக் கேட்கிறேன் என் அதே தாயை எனக்கு மீண்டும் கொடு.” எனத் பதிவிட்டுள்ளார்.

அமிதாப் பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள பதிவில். “ அம்மாவின் அன்பைப் போல் வேறு ஒன்றும் இல்லை. இன்றைய அன்னையர் தினத்தில் நான் என் தாய் மற்றும் மற்ற அனைத்து தாய்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”  என டிவிட்டியுள்ளார்.