ஸ்வீட், கிஃப்ட் செல்ஃபி - அன்னையர் தினம் கொண்டாடிய ஸ்டாலின்

அன்னையர் தினமான இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது அன்னையை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

ஸ்டாலின்

உலகம் முழுவதும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. தாய்மையைப் போற்றும் வகையில் வருடா வருடம் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் சமூக வலைதளங்களில் அன்னையர் தினம் தான் செம ட்ரெண்டிங். அதன் படி பிரபலங்கள், நெட்டிசன்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்கள் தாயின் புகைப்படங்கள் மற்றும் அவர்களுடன் அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட புகைப்படங்கள் என இணையத்தை நிரப்பி வருகின்றனர்.

இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கோபாலப்புரத்தில் உள்ள தனது தாயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அவருக்கு புது புடவையைப் பரிசாக வழங்கி, இனிப்பு ஊட்டி, அவருடன் செல்ஃபி எடுத்து தனது தாயுடன்   சிறப்பாக அன்னையர் தினத்தை கொண்டாடியுள்ளார். மேலும் அவர் தனது தாயுடன் இருக்கும் புகைப்படங்களை டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

அதில் “ அன்னையர் தினத்தையொட்டி கருவிலேயே உணர்வூட்டி, உயிரூட்டி, உறவையும் உலகையும் உவப்புடன் காட்டிய அன்பு தாயிடம் கோபாலபுரம் இல்லத்தில் வாழ்த்துகளைப் பெற்று மகிழ்ந்தேன். இன்று மட்டுமல்ல, எந்நாளும் அன்னையரை இதயத்தில் ஏந்திப் போற்றி மகிழ்ந்திடுவோம்! ” என பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமுக வலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!