வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (13/05/2018)

கடைசி தொடர்பு:16:48 (13/05/2018)

'தவறு செய்பவர்கள் கண்காணிக்கப் படுகிறார்கள்' - டிடிவி தினகரன் எச்சரிக்கை

மன்னிப்பு கேட்கவில்லை என்றால் செல்லூர் ராஜூ அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் டி.டி.வி தினகரன் எச்சரிக்கை .

தவறு செய்யும் அரசு அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் எனஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொது செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்

மதுரையில் தனியார் ஹோட்டலில் தங்கியிருக்கும் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது "அமைச்சர் செல்லூர் ராஜூ நகரத்தார்கள் பற்றி பேசியது தவறு , நகரத்தார்கள்  தமிழர்களின் சிறப்பான கலாச்சாரத்தை வெளி கொண்டு வந்தவர்கள் அவர்களைப் பற்றி  பேசியது முற்றிலும் தவறு. அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் இதுகுறித்து வழக்குத் தொடர இருப்பதாக நீதியரசர் லெட்சுமணன் கூறியிருக்கிறார். செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்க வில்லையென்றால் அவர் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும்.

செய்தியாளர்களை அவதூறாகப் பேசிய எஸ்.வி சேகரை எடப்பாடி பழனிசாமி கைது செய்ய மாட்டார். பி ஜே.பிகாரர்களை எப்படி, எடப்பாடி பழனிசாமி கைது செய்யச் சொல்வார்?. இதை நாம் எதிர்பார்க்க வேண்டாம். நிச்சயம் கைது செய்ய மாட்டார்கள். ஆனால் கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆளும்கட்சி தவறைத் தட்டி கேட்டவர்களை இரவு நேரங்களில் போலீஸார் வீடு புகுந்து கைது செய்தனர். தவறு செய்யும் அரசு அதிகாரிகளைக் கண்காணித்து வருகிறோம். இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் அதனை விரும்பவில்லை எனவே அதற்காகப் போராட்டம் நடத்துவோம் .தமிழகத்தில் தற்போது நடைபெறுவது பி.ஜே.பியின்  கிளை அரசுதான். கர்நாடகத் தேர்தலை பொருத்தவரை தமிழிசை சொல்வது அவருடைய கருத்து . ஆனால் மக்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் நடக்கும்” என்றார்.