`பத்மநாப சுவாமி கோயில் நிலவறையைத் திறக்க எதிர்ப்பு!’ - போராட்டத்தில் இறங்கிய அமைப்பு

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் 'பி' அறையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து காசரகோடு முதல் கன்னியாகுமரி வரை 10 லட்சம் கையெழுத்து இயக்கம் நடந்தது.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் 'பி' அறையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை கையெழுத்து இயக்கம் நடந்தது.

பத்மநாபசுவாமி கோயில் 'பி' அறையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம்

புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிலவறைகளை கோர்ட் உத்தரவுப்படி திறந்து பார்த்தபோது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் இருந்தது தெரியவந்தது. இந்தநிலையில் பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள "பி" அறையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்தும், கோயில் ஆபரணங்களை அருங்காட்சியகத்தில் வைக்கக் கூடாது என வலியுறுத்தியும் காசர்கோட்டில் இருந்து கன்னியாகுமரி வரை ரத யாத்திரை மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது. 

இந்த கையெழுத்து இயக்கத்தை ஒருங்கிணைத்த அகிலபாரத பத்மநாப தாஸா பக்தஜன சேவா சமிதி தலைவர் மாதவன் நாயர் கூறுகையில், "பத்மநாபசுவாமி கோயிலில் 40 லட்சத்துக்கும் அதிகமான ஓலைச் சுவடிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பாதுகாக்கும் விதமாக புத்தகங்களாக மொழிபெயர்க்க வேண்டும். மேலும், பத்மநாபசுவாமி கோயில் குறித்த புத்தகங்களில் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டால் மட்டுமே நிலவறைகளை திறக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பத்மநாபசுவாமி கோயிலில்'பி' அறையை திறக்கக்கூடாது என வலியுறுத்தி கேரள மாநிலம் காசர்கோட்டில் கடந்த 4ம் தேதி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கினோம். நேற்று இரவு சாமித்தோப்பில் தங்கினோம். இன்று மாலை 6 மணிக்கு திருவனந்தபுரத்தில் நடக்கும் யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் சாமித்தோப்பு பாலபிரஜாதிபதி, பந்தளத்து மன்னர் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். மக்களிடம் பெறப்பட்ட 10 லட்சம் கையெழுத்துக்களை ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி பிரதமரிடம் சமர்ப்பிக்க இருக்கிறோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!