`திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ் அனுப்பியது இதனால்தான்!’ - ஜெய் ஆனந்த் விளக்கம் | Dhivakaran's son Jai Anand speaks about sasikala's Legal notice

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (13/05/2018)

கடைசி தொடர்பு:17:00 (13/05/2018)

`திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ் அனுப்பியது இதனால்தான்!’ - ஜெய் ஆனந்த் விளக்கம்

தனது புகைப்படங்களைப் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட சில விதிமுறைகளுடன் சசிகலா நோட்டீஸ் அனுப்பியது குறித்து திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

தனது புகைப்படங்களைப் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட சில விதிமுறைகளுடன் சசிகலா நோட்டீஸ் அனுப்பியது குறித்து திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

ஜெய் ஆனந்த்

தினகரன் - திவாகரன் இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், தனது புகைப்படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும், தன்னை உடன் பிறந்த சகோதரி என ஊடகங்கள் முன்னிலை குறிப்பிடக் கூடாது என்று கூறியும் திவாகரனுக்கு சசிகலா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சசிகலா நோட்டீஸ் அனுப்பியது குறித்து திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் பேசியிருக்கிறார். 

மன்னார்குடியில் உள்ள கொத்தவள்ளி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் கலந்துகொண்டதோடு போஸ் மக்கள் பணியகம் சார்பில் அன்னதானம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், ``போஸ் மக்கள்  பணியகம் சார்பில் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்த உள்ளோம். இந்த போஸ் மக்கள் பணியகம், அரசியல் கட்சியாக மாறாது. சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் நோட்டீஸ் அனுப்பியது, குடும்பத்தின் மூத்த உறுப்பினருக்கும், குடும்பத்தின் மற்றொரு உறுப்பினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நடந்துள்ளது. நான் இதில்  கருத்து சொல்வது சரியாக இருக்காது .போஸ் மக்கள் பணியகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த இடத்தில் அரசியல் பேசுவது சரியாக இருக்காது. சசிகலாவை சந்திக்க இருப்பது பற்றி என் தந்தையிடம் தான் கேட்க வேண்டும்’’ என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க